விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, எப்படி காவிரியிடம் சம்மதம் வாங்குவது தெரியவில்லை என்றார். அதற்கு பின் சாரதா, உனக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார். காவிரி ரொம்பவே சந்தோஷப்பட்டு என்ன காரணம் சொன்னீர்கள் என்றார். சாரதா, நெருக்கமான சொந்தத்திலேயே காவிரியை கேட்டிருக்கிறார்கள். அவர்களை தான் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். காவிரி, நிஜமாகவே அவர்கள் உன்னை பெண் கேட்டு வந்தார்களா? யார் என்றார். சாரதா, விஜயின் வீட்டில் தான் வந்தார்கள் என்று சொல்கிறார். காவேரி ஷாக் ஆகி நிற்கிறார்.

காவிரி, அவர்களுக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி எல்லாம் கேட்டிருப்பார்கள். இதை நான் சும்மா விட மாட்டேன் என்று கொந்தளித்துக் கொண்டிருந்தார். சாரதா எவ்வளவோ சமாதானம் செய்தும் காவேரி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து விஜய்-அம்மு இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். காவிரி, விஜய்யை முறைத்துக் கொண்டே அம்முவை உள்ளே அழைத்து சென்றார். அதற்கு பின் சாரதா, விஜய்யின் தாத்தா வந்து சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் கோபப்பட்ட விஜய், தன்னுடைய வீட்டிற்கு சென்று சண்டை போட்டார்.
மகாநதி:
சோமு, அன்பரசு எல்லோருமே எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். கோபத்தில் விஜய், என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன். தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் என்று சொல்லி விட்டார். இன்னொரு பக்கம் காவேரி, குழந்தையை நானே வீட்டில் விட்டு அவர்களுக்கு வார்னிங் கொடுத்து விட்டு வருகிறேன். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. என்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ள தெரியும் என்று சாரதா விடம் ரொம்ப கடுமையாக நடந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, அம்முவை அழைத்துக் கொண்டு விஜயின் வீட்டிற்கு செல்கிறார். இதைப் பற்றி சாரதா, விஜய்க்கு போன் சொல்லி விடுகிறார். பின் விஜயின் வீட்டிற்கு சென்ற காவேரி, உங்கள் மனதில் என்ன தைரியம் இருக்கிறது? யாரை கேட்டு பெண் கேட்க வந்தீர்கள்? உங்களுக்கு இடம் கொடுத்தது என் தப்புதான் என்று விஜய்யின் தாத்தா, சித்தப்பா எல்லோரையுமே பேசுகிறார். யாராலும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. காவிரி, தன் மனதில் இருந்த ஆத்திரத்தை எல்லாம் கொட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் விஜய், காவிரி பின்னாடியே தொடர்ந்து வந்து தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் யாரிடமும் பேச சொல்லவில்லை. அவர்களாகவே இதை செய்து விட்டார்கள் என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் நிலைமையை புரிந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சாரதா, யமுனா- கங்கா இருவருக்கும் போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த காவேரி, இனிமேல் இந்த விஷயம் பற்றி யாரும் பேசாதீர்கள் என்று செல்கிறார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்






