விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோபத்தில் நிவின், யமுனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அந்த சமயம் வந்த குமரன், யமுனாவை பிடித்து எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று கேட்டார். அப்போது நடந்த எல்லாவற்றையும் நிவின், குமரனிடம் சொன்னார். பின் குமரன், யமுனாவை உள்ளே அனுப்பிவிட்டு நிவினுக்கு அறிவுரை சொன்னார். அந்த சமயம் பார்த்து குமரனுக்கு போன் செய்த விஜய், காவேரி எங்கே என்று கேட்டார். அப்போது குமரன், காவிரி கொடைக்கானலுக்கு கிளம்பி இருப்பாள். உங்களுக்கு தெரியாதா? என்று சொல்ல, விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.

அஜய்யின் அப்பா, அம்மா இருவருமே விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள், தாத்தா பாட்டி இடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், விஜயின் தாத்தா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். பஸ் ஸ்டாண்டில் காவிரி இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜய் வந்தார். விஜய்யை பார்த்தவுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் காவிரி அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
மகாநதி:
உடனே விஜய், பாய் சொல்லிவிட்டு கிளம்பு. வேறொரு புது வாழ்க்கையை ஆரம்பித்துக்கொள். என்னை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க என் குழந்தை மீது சத்தியம் பண்ணி இருக்கிறாய். எப்படி உன்னால் இதை செய்ய முடிந்தது என்று கேட்டவுடன் காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது அங்கு வெண்ணிலா வந்தார். உடனே விஜய், நான் குழப்பத்தில் இருந்தே போது வெண்ணிலா நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார் என்றார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, நான் விஜயின் மீது வைத்திருந்த காதலை விட நீ வைத்திருந்த காதல் தான் உண்மையானது. நீ ஊரை விட்டு கிளம்ப மாட்டாய் என்று நினைத்தேன். நான் உங்கள் இருவரையும் பிரிக்க மாட்டேன். நீங்கள் ரெண்டு பேருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் கேட்டு காவிரிக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பின் வெண்ணிலா, விஜய்- காவேரி இருவரையும் சேர்த்து வைத்து விட்டு தன்னுடைய மாமாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரியை பார்த்து அவருடைய அம்மா ஷாக் ஆனார். பின் காவிரி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரி அம்மாவிடம் பேசுகிறார். உடனே கோபப்பட்டு அவர் விஜயிடம் கத்தி சண்டை போடுகிறார். அதற்குப்பின் இன்னொரு வெர்சனில் விஜய் வீட்டிற்குள் வந்து ரொம்ப ஜாலியாக இங்கிலீஷில் பேசி காவிரியை அழைக்கிறார். அவருடைய மாமியாரும் ஜாலியாக இங்கிலீஷில் பேசி காவிரி- விஜய் இருவரையும் அனுப்பி வைக்கிறார். இதையெல்லாம் நினைத்து பார்த்து காவிரி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்குப்பின் விஜய்க்கு போன் செய்து காவிரி பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது காவிரி, எங்கள் அம்மா அனுப்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய், உன்னை தூக்கிக் கொண்டு வந்து விடுவேன் என்கிறார். இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி, சித்தி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயின் பாட்டி, காவிரி இந்த வீட்டுக்கு வந்தால் மீண்டும் பசுபதியால் பிரச்சனை வரும். அதனால் விஜய்- காவிரி இருவரையும் சேர விடக்கூடாது. இனி விஜய்யின் வாழ்க்கையில் காவிரி வேண்டாம் என்றெல்லாம் திட்டம் போடுகிறார்கள். மறுநாள் காலையில் காவிரி, விஜய் தன்னை அழைத்துச் செல்வார் என்று பயங்கரமாக ரெடியாகி இருக்கிறார். பின் சந்தோஷத்தில் காவிரி தலைகால் புரியாமல் நடனம் ஆடுகிறார். இன்னொரு பக்கம் விஜய், காவிரிக்காக ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கி வைத்து இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






