விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பின்னாடியே தொடர்ந்து வந்து தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் யாரிடமும் பேச சொல்லவில்லை. அவர்களாகவே இதை செய்து விட்டார்கள் என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் நிலைமையை புரிந்து கொண்டார். இன்னொரு பக்கம் சாரதா, யமுனா- கங்கா இருவருக்கும் போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த காவேரி, இனிமேல் இந்த விஷயம் பற்றி யாரும் பேசாதீர்கள் என்றார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

காவேரி தூங்காமல் போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய், மன்னிப்பு கேட்டு மெசேஜ் போட்டார். காவிரி அதை பார்த்தார். பின் விஜய், வாய்ஸ் நோட்டில் என் குழந்தை யாரிடமும் இந்த அளவுக்கு பாசமாக இல்லை. உங்களிடம் தான் பாசமாக இருந்தார். அதற்காகத்தான் உங்கள் வீட்டிற்கு நாங்கள் வருகிறோம். என் மனைவி இறந்து போன விஷயம் என் மகளுக்கு தெரியாது. நீங்கள் சொல்ல வேண்டாம். அவள் உங்கள் மீது ரொம்ப பிரியமாக இருந்தார். அதற்காக நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்.
மகாநதி:
எங்கள் வீட்டில் செய்ததது தவறு என்றெல்லாம் சொன்னார். இதை பார்த்து காவிரி மனதுக்குள் சிரித்துக் கொண்டார். ஆனால், எந்த பதிலும் சொல்லவில்லை. இது எல்லாம் சாரதா பார்த்து விட்டார். பின் மறுநாள் காலையில் சாரதா, அம்முவிற்காக சமைத்து வைத்திருந்தார். காவிரி வேண்டாம் என்றார். ஆனால், சாரதா கேட்கவில்லை. அம்முவிடம் கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். காவிரியும் குழந்தைக்காக சாப்பாடு எடுத்து கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை பார்ப்பதற்காக அழகாக தயாராகி சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோ ட்டில் காவேரி, எதற்காக விஜயின் மீது ரொம்ப அக்கறை காட்டுகிறீர்கள்?
என்று கேட்கிறார். அதற்கு சாரதா, அந்த ராகவால்தான் விஜயின் குடும்பத்திற்கும் விபத்து நடந்தது.
அந்த ராகவ் உன் மீது வண்டி ஏற்ற வந்தான். அப்போது தவறுதலாக விஜய் காரின் மீதும் மோதிவிடுகிறது. அவருடைய மனைவியும் அதில் இருந்தார்கள். உன்னை சேர்த்த ஹாஸ்பிடலில் தான் விஜயையும், அவர் மனைவியும் சேர்த்து இருந்தார்கள். விஜயின் மனைவி குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டார். விஜயும் ரொம்ப சீரியஸாகத்தான் இருந்தார்.

சீரியல் ட்ராக்:
அதனால்தான் அவரை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று சொல்கிறார். இதைக் கேட்டு காவிரிக்கு எமோஷனல் ஆகிறது. நம்மால் தான் விஜயின் மனைவி இறந்து விட்டாரோ? என்று கஷ்டப்படுகிறார். பின் இதைப்பற்றி விஜய் இடம் சொல்லி காவிரி வருத்தப்படுகிறார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் அதை பற்றி யோசிக்காதீர்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் அடிக்கடி போன் பேசுவது, மெசேஜ் செய்வது என்று இருக்கிறார்கள். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.






