விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, குழந்தையை வைத்து டிராமா போடுகிறீர்களா? நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் இப்படி எல்லாம் செய்கிறீர்களா? என்று மோசமாக பேசி இருந்தார். நீங்கள் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்களிடம் திருமணத்தை பற்றியும் என் குழந்தையை பற்றியும் பேசமாட்டேன் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் அம்மு வரவில்லை. காவேரி, அம்முவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு காவிரியை தவிர எல்லோருமே சென்றிருந்தார்கள். அம்முவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய், காவிரி சொன்னதை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்

விஜய், காவிரி தன்னிடம் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு சாரதா, கங்காவிற்கு ஷாக்கிங்காக இருக்கிறது. விஜய், இனிமேல் நான் உங்கள் மகள் விஷயத்தில் தலையிட மாட்டேன். நானும் அம்முவும் உங்கள் வீட்டிற்கு வர மாட்டோம். நீங்களும் எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. சாரதா, காவிரி பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் விஜய் எதுவும் பேசாமல் இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு போன சாரதா, விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் தன்னுடைய மகள்கள், நிவினிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.
மகாநதி:
அதோடு காவிரி வீட்டிற்கு வராததை நினைத்து சாரதா கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் கோவிலில் காவேரி, விஜயிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டார். பின் அம்முவை சந்திக்க காவிரி வீட்டிற்கு போனார். அப்போது விஜயின் சித்தி ராதா, எதற்காக இங்கே வந்தாய் என்று கடுமையாக நடந்து கொண்டார். பின் தாத்தா, ராதாவை திட்டி காவிரியை உள்ளே போக சொன்னார். காவேரி- அம்மு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அம்மு, நீங்கள் என் அப்பாவை கல்யாணம் செய்துகொண்டு என்னுடனே இருங்கள் என்று எமோஷனாக பேசினார். அதை விஜய் கேட்டு விட்டார்.

சீரியல் ட்ராக்:
காவேரி குழந்தையிடம் பேசியதை பார்த்து விஜய் சண்டை போட்டார். பின் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி அங்கிருந்து காவிரி கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு காவிரி வராததால் சாரதா ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். காவிரியின் சகோதரிகள் எல்லோருமே ஆறுதல் சொல்லியும் சாரதா கேட்கவில்லை. நிவினிடம் நடந்ததை சொன்னார். நிவின், விஜயிடம் காவிரி வராததை சொன்னார். பின் நிவின்- விஜய் இருவருமே காவிரியை தேடி அலைகிறார்கள். எங்குமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் காவிரி ரோட்டில் நடந்து வருவதை விஜய் பார்த்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். சாரதா ரொம்ப எமோஷனலாக அழுது புலம்புகிறார். காவிரி, என்னுடைய விருப்பத்தை யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்று கத்துகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே காவிரியின் விருப்பத்திற்கு சம்மதம் சொல்லி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் நிவின்- காவிரி வீட்டில் நடந்ததை விஜய் இடம் சொல்கிறார். விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன். காவிரி என்னை விட்டுப் போக மாட்டாள் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டிலிருந்து காவிரியை பார்க்க வந்திருக்கிறார்கள். காவிரி மட்டும் சந்தோசமாக இருக்கிறார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்கள்






