விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி, எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. யாருக்காகவும் விஜய் விட்டு தர மாட்டேன் என்று பேசி இருந்தார். இதனால் வெண்ணிலா கோபப்பட்டு காவிரியிடம் சண்டைக்கு போனார். பின் காவிரி- வெண்ணிலா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது வந்த போலீஸ், அவர்களின் சண்டையை நிறுத்தி பஞ்சாயத்து விசாரித்தார். இரு தரப்பிலுமே மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்தார்கள். உடனே போலீஸ், விஜய் -அஜய் அப்பாவை தவிர எல்லோரையும் வெளியே போக சொல்லி விட்டார். பின் காவிரி வரவில்லை என்று அவருடைய வீட்டில் இருந்து போன் செய்தார்கள். காவிரியும் என்னவோ சொல்லி சமாளித்தார்.

ராகினி, உன் புருஷனை இனிமேல் வெளியே எடுக்க முடியாது. விஜயை தொக்காக உள்ள வைத்து விட்டோம். வெண்ணிலாவுக்கு கிடைக்காத விஜய் உனக்கும் கிடைக்கக்கூடாது என்றெல்லாம் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். உடனே கோபத்தில் கோபத்தில் காவிரி, ராகினியை அடித்து விட்டார். இதனால் பசுபதி, காவிரியிடம் சண்டைக்கு போனார். பின் சண்டையில் ராகினி, காவிரியை அடித்து விட்டார். பின் இருவருக்கும் இடையே கலவரம் வெடித்தது. அங்கிருந்த போலீஸ் இருவரையும் விலக்கி விட்டார்கள்.
மகாநதி சீரியல்:
அப்போது அங்கு வந்த விஜய்யின் தாத்தா, எதற்கு தேவையில்லாமல் சண்டை போடுகிறார் காவிரி. இவர்களைப் பற்றி நமக்கு தெரியும் தானே என்று காவிரியை அழைத்து சென்றார். அதற்கு பின் வழக்கறிஞர், ஏதாவது குழு கிடைத்தால் கூட விஜய்யை அழைத்து வந்துவிடலாம். இன்னும் விஜய் மீது எப்ஐ ஆர் போடவில்லை என்று சொன்னார். உடனே காவிரி, விஜயின் சித்தியை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். பின் காவிரி-விஜயின் தாத்தாவும் சித்தி வீட்டுக்கு போனார்கள். அங்கு தாத்தா, விஜய்யின் நிலைமை பற்றி எடுத்து பேசினார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் தாத்தா எவ்வளவு சொல்லியுமே விஜயின் சித்தி, அமைதியாகவே நிக்கிறார். அப்போது காவிரி, விஜய்யை கைது செய்த உடனே டிவியில் எல்லாம் வந்துவிட்டது. எல்லாம் தெரிந்து நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா? உண்மையை மட்டும் சொல்லுங்கள். தயவு செய்து விஜயை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறார். அதற்கு விஜயின் சித்தி, என் கணவர் உண்மையை சொல்லக்கூடாது என்று மிரட்டினார். என் மகனுமே என் வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று சொல்கிறார். நான் என்ன செய்வது? என்னால் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்கிறார். இதனால் தாத்தா கோவப்படுகிறார். காவிரி,உங்களுக்கு மனசாட்சி இருந்தால் தயவு செய்து விஜய்யை காப்பாற்றுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காவிரி- விஜயை நினைத்து ப்ரஸரில் கங்காவிற்கு வயிறு வலி எடுத்து விட்டது. இதனால் அவரை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள். பின் வீட்டிற்கு கங்காவை அழைத்து வருகிறார்கள். அப்போது கங்காவின் மாமியார், இங்கிருந்தால் என்னுடைய பேர பிள்ளைக்கு ஏதாவது பிரச்சனையாகும் என்று பயப்படுகிறார். உடனே கங்காவின் அம்மா, நாங்களே கிளம்பி வருகிறோம். மாப்பிள்ளையும் கங்காவும் இங்கே இருக்கட்டும். நாங்கள் ஊரிலேயே ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்று முடிவு எடுக்கிறார். இன்னொரு பக்கம் தாத்தாவிற்கு ஃபோன் செய்த வக்கீல், ரொம்ப நேரம் ஆகிவிட்டது. விஜய் மீது எஃப் ஐ ஆர் பதிவு பண்ணாமல் இருக்க முடியாது என்று சொல்லுகிறார். போலீஸ் ஸ்டேஷன் வந்த காவேரி, வெண்ணிலாவிடம் பேசப்போகிறார்.
https://www.youtube.com/watch?v=IB28MXsrpFc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் காவிரி, வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு தனியாக பேசுகிறார். அப்போது காவிரி, நீ விஜயை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறாய். ஆனால், அவர் மீது வீண்பழி போட்டு இருக்கிறாயே, அதை எப்படி உன்னால் சரி செய்ய முடியும் என்று கேட்கிறார். அப்போது வெண்ணிலா, பசுபதி சொல்லித்தான் நான் இந்த மாதிரி விஜய் மீது பொய்யான பழி சுமத்தினேன் என நிரூபிப்பேன் என்றார். இதையெல்லாம் காவிரி தன்னுடைய தனக்கு தெரிந்தவரின் மூலம் போனில் ரெக்கார்ட் செய்கிறார். பின் இதை போலீஸிடம் கொடுத்தவுடன் விஜய்யை விடுதலை செய்கிறார். விஜய்யை பார்த்தவுடன் காவேரி சந்தோஷப்படுகிறார்.






