விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், தன்னுடைய தாத்தா பாட்டியிடம் எடுத்து சொல்லி புரிய வைத்தார். இது எல்லாம் கங்கா கேட்டு விட்டார். பின் இதைப்பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கங்கா வருத்தப்பட்டார். சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
அதற்குப்பின் விஜய் தலை வலிக்கிறது என்று சொல்வதால் காவேரி காபி போட்டு கொடுத்து தலையை பிடித்து விட்டார். காவேரி, என்னால் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை. சீக்கிரமாகவே சரி செய்து விடலாம் என்றார்.

கங்கா, சாரதா இருவருமே தங்களுடைய வீட்டிற்கு கிளம்புவதாக காவிரியிடம் சொல்கிறார்கள். காவிரி வேண்டாம் என்று தடுத்தார். விஜய், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். கடைசியில் காவிரி, தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்து அங்கேயே தங்க வைத்தார். அதற்கு பின் விஜய்யின் பாட்டி ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது சாரதா, உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே கோபப்பட்ட விஜயின் பாட்டி, உங்களால் தான் எனக்கு இந்த பிரச்சனை. என் பேரன் நிம்மதி இல்லாமல் திரிகிறான்.
மகாநதி:
அவன் ஆபீசிலும் கவனம் வைக்க மாட்டான். நீங்கள் இங்கிருந்து கொண்டு ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது.
இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் ஆபிஸ் பிரச்சனை எப்படி சரி செய்வது என்று தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய், கஸ்டமர்ஸ் எல்லாம் சந்தித்து பேச வந்தார். ஆனால், யாருமே விஜய் சொல்வதை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்டு காவேரி, கத்துகிறார். உடனே அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. விஜய் பதறிப் போனார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. தயவுசெய்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அவர்கள் எல்லோரையும் சமாதானம் செய்து உட்கார வைக்கிறார். பின் விஜய், தன்னுடைய தரப்பு நயத்தை எல்லாம் எடுத்து சொல்லி வீட்டு வேலையை முடித்து தருவதற்கு சில மாதங்கள் நேரம் கேட்கிறார். ஆனால், கஸ்டமர் எல்லோருமே முடியாது என்று மறுக்கிறார்கள். பின் விஜய், எப்படியோ பேசி நேரம் வாங்கிக் கொள்கிறார். அப்போது கஸ்டமர் ஒருவர், நீங்கள் சரியான நேரத்தில் முடித்து தரவில்லை என்றால் நாங்கள் போலீஸில் புகார் கொடுப்போம் என்றெல்லாம் செல்வதால் விஜயும் ஒத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி பேசியது நினைத்து சாரதா, கங்கா இருவருமே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து மலர் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே சாரதா கேட்கவில்லை. இன்னொரு பக்கம் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று விஜய்- காவிரி இருவருமே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த நிவின், குமரன் இருக்கும் இடம் தெரியவில்லை. சீக்கிரமாகவே கண்டுபிடிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்.






