விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயுமே கார்த்தியிடம் பேசி இருந்தார். அப்போது விஜய், காவேரி என்னுடைய முறை மாமன் மகள். ஆனால், அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். அவளை போய் எப்படி ஓகே சொன்னீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அது மட்டும் இல்லாமல் சாரதாவிற்கு போன் செய்து காவிரியைப் பற்றி பேச சொன்னார் விஜய். சாரதா, காவிரியை பற்றி மோசமாக சொன்னார். இதனால் கார்த்திக்கு பயமாக இருக்கிறது. காவிரியை திருமணம் செய்ய வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விட்டார். விஜய் வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து சென்றார்.

கார்த்திக், எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டு காவேரிக்கு ஷாக்காக இருக்கிறது. விஜய் ரொம்ப சந்தோசப்பட்டார். அதற்குப்பின் விஜய், காவிரியும் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு காரில் வந்தார். அப்போது விஜய் வேண்டும் என்று காவிரியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு விஜய், சாரதாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி சிரித்தார். சாரதாவுமே காவிரியை கிண்டல் செய்தார். இதனால் கொந்தளித்த காவிரி, விஜய்- சாரதா இருவரையும் திட்டி விட்டு சென்றார்.
மகாநதி:
காவிரியை கிண்டல் செய்ததற்காக விஜய் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பினார். காவிரியும் அதை பார்த்து இருந்தார். ஆனால், எதுவுமே ரிப்ளை செய்யவில்லை. அதற்குப்பின் காவிரி, விஜய்க்கு பார்த்த பெண்ணிடம் பேசி சம்மதம் வாங்கி கொண்டார். மறுநாள் காலையில் விஜய், காவிரியிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீடு முழுவதுமே பலூனில் சாரி என்று எழுதி வைத்திருந்தார். அப்போது வெளியே வந்த காவிரி ரொம்ப மோசமாக விஜய் இடம் பேசி வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சாரதா, எதற்காக விஜயிடம் அப்படி பேசினாய்? என்று கேட்கிறார். கோபத்தில் காவிரி, நான் ஏதாவது சொல்லிடப் போகிறேன். நீயும் அந்த ஆளும் சேர்ந்து என்னென்ன வேலை பண்ணினீர்கள் என்று எனக்கு தெரியும். கார்த்திக் எனக்கு போன் செய்து சொல்லிவிட்டான். என்னைப் பற்றி ரொம்ப மோசமாக ரெண்டு பேரும் சேர்ந்து கார்த்தி இடம் சொல்லி இருக்கிறீர்கள். நீ எல்லாம் ஒரு பெத்த தாயா? என்று பயங்கரமாக கொந்தளிக்கிறார். அதோடு சாரதாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் காவிரி.

சீரியல் ட்ராக்:
உடைந்துபோன சாரதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் காவிரி, பள்ளிக்கு கிளம்பி சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் காவிரி சொன்னதை எல்லாம் நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்படுகிறார்.
அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் ஒரு விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் பிள்ளைகள் அம்மாவுடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை கேட்டு அம்மு ரொம்பவே வருத்தப்படுகிறார். தனக்கு அம்மா இல்லாததால் அம்மு எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இதை எல்லாம் கவனித்த காவிரி ரொம்பவே வருத்தப்படுகிறார்.






