விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியை சந்தித்த விஜய், எல்லாம் பேசி முடிந்து முடித்து விட்டீர்களா? என்றார். காவிரி, கார்த்தியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவருக்கும் என்னை பிடிக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரத்தில் எங்கள் இருவருக்கும் செட்டாகிவிடும் என்றார். இதை கேட்டு விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. பின் காவிரி, விஜயை பார்க்க வந்த பெண்ணை பற்றி விசாரித்தார். விஜய், அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னார். அதற்குப்பின் காவிரி அந்த பெண்ணிடம் விஜய் பற்றி பேச போனார்.

விஜயுமே கார்த்தியிடம் பேசி இருந்தார். அப்போது விஜய், காவேரி என்னுடைய முறை மாமன் மகள். ஆனால், அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். அவளை போய் எப்படி ஓகே சொன்னீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அது மட்டும் இல்லாமல் சாரதாவிற்கு போன் செய்து காவிரியைப் பற்றி பேச சொன்னார் விஜய். சாரதா, காவிரியை பற்றி மோசமாக சொன்னார். இதனால் கார்த்திக்கு பயமாக இருக்கிறது. காவிரியை திருமணம் செய்ய வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விட்டார். விஜய் வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து சென்றார்.
மகாநதி:
கார்த்திக், எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டு காவேரிக்கு ஷாக்காக இருக்கிறது. விஜய் ரொம்ப சந்தோசப்பட்டார். அதற்குப்பின் விஜய், காவிரியும் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு காரில் வந்தார். அப்போது விஜய் வேண்டும் என்று காவிரியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு விஜய், சாரதாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி சிரித்தார். சாரதாவுமே காவிரியை கிண்டல் செய்தார். இதனால் கொந்தளித்த காவிரி, விஜய்- சாரதா இருவரையும் திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரியை கிண்டல் செய்ததற்காக விஜய் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்புகிறார். காவிரியும் அதை பார்த்து இருக்கிறார். ஆனால், எதுவுமே ரிப்ளை செய்யவில்லை.
அதற்குப்பின் காவிரி, விஜய்க்கு பார்த்த பெண்ணிடம் பேசி சம்மதம் வாங்கி கொள்கிறார். மறுநாள் காலையில் விஜய், காவிரியிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீடு முழுவதுமே பலூனில் சாரி என்று எழுதி வைத்திருக்கிறார். அப்போது வெளியே வந்த காவிரி ரொம்ப மோசமாக விஜய் இடம் பேசி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா வருத்தப்படுகிறார்.






