விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்பட்டார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போனார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார்கள். பின் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது.
மகாநதி:
வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருந்தார்கள். காவிரிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பாட்டி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து விஜய் இனிமேல் இங்கு இருக்க கூடாது. காவிரியுடன் இருந்தால் என் பேரனுக்கு இன்னும் ஆபத்துதான். அவனை வேறு ஒரு ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=uTMPjnAV8mg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கண்விழித்த காவிரி, நீங்கள் எல்லோரும் வந்து இருக்கிறீர்கள். அப்பா எங்கே? என்று கேட்கிறார். எல்லோருக்குமே ஒன்றும் புரியவில்லை. டாக்டர், சாரதா குடும்பத்தை தனியாக அழைத்து காவிரிக்கு நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது. பழைய நினைவுகள் தான் இருக்கிறது என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். விஜயின் பாட்டி இதுதான் சந்தர்ப்பம் என்று விஜய்- காவேரி இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறார்.






