விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலா, நீ எனக்கு கொடுத்த சத்தியத்தை எப்படி நம்புவது? இதற்கு முன்பே எனக்கு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஏமாற்றி விட்டாய். உன்னை நான் நம்ப மாட்டேன் என்று சொன்னார். உடனே காவேரி, எமோஷனலாக வெண்ணிலாவின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்து என் குழந்தையின் மீது சத்தியம். நான் விஜய்யை உனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன் என்று அழுதார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் நிவின், ராகினிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது பசுபதியை பற்றி விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்குப்பின் நிவின் நேரடியாக ராகினி வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது நிவின் ரொம்ப எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார். பின் பசுபதி பற்றியும் கேட்டார். ராகினி ஏதேதோ சொல்லி சமாளித்து நிவினை அனுப்பி விட்டார். பின் ராகினி தன்னுடைய அப்பாவை பார்க்க கிளம்பி இருந்தார். பின்னாடியே நிவின் பாலோ செய்தார். இன்னொரு பக்கம் குமரன், வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு சென்றார். அங்கு வெண்ணிலாவின் அத்தை தான் இருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்று விசாரித்தார். ஆனால், வெண்ணிலாவின் அத்தை உண்மை சொல்லாமல் ஏதேதோ காரணத்தை சொன்னார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலாவின் அத்தை, என் கணவரை பசுபதி ஆட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த ஆடியாட்கள் தான் போன் செய்து அவ்ரிடம் பேச தருவார்கள். நான் உண்மையை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் என்றார். பின் குமரன், நீங்கள் போன் செய்து பேசுங்கள் என்றார். வெண்ணிலா அத்தையும் போன் செய்து பேசி இருந்தார். அப்போது குமரன், ரேஷன் கார்டு அட்ரஸ் கேட்க வந்தது போல் வெண்ணிலாவின் மாமாவிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராகினியை, நிவின் பாலோ செய்து சென்றார்.

நேற்று எபிசோட்:
ராகினி, பசுபதி இருக்கும் இடத்திற்கு போனார். ஒரு வழியாக நிவின், பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டார். அப்போது குமரன், வெண்ணிலாவின் மாமாவை தேடி சென்றிருக்கும் விஷயம் பசுபதிக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் தன்னுடைய அடியாட்களை வைத்து குமரனை பிடிக்க சொன்னார். பசுபதி ஆட்களும் குமரனை பிடிக்கப் போனார்கள். அப்போது குமரன் தப்பித்து எப்படியோ ஓடிவிட்டார். இன்னொரு பக்கம் காவேரி, விஜயின் நிலைமையை நினைத்து வேதனை பட்டுக்கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், பசுபதியின் ஆட்கள் முகத்தில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பித்து விடுகிறார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவிற்கு நினைவு திரும்ப விட்டது. அவர் கதையை முடித்து விடுங்கள் என்று தன்னுடைய ஆட்களிடம் சொல்லி அனுப்புகிறார். நிவின் இதையெல்லாம் கேட்டு விடுகிறார். அதோட நிவின் கால் தடுமாறி கீழே விழுவதால் சத்தம் கேட்டு பசுபதி வெளியே வருகிறார். ஆனால், நிவின் அதற்குள் தப்பித்து விடுகிறார். பின் நிவின், பசுபதி இருக்கும் இடத்தை குமரனுக்கு சொல்கிறார். அதற்கு பின் காவேரி, குமரனுக்கு போன் செய்து நடந்ததை விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதன் பின் காவிரியிடம் நிவின், வெண்ணிலாவுக்கு ஆபத்து. நான் ஹாஸ்பிடல் போகிறேன் என்று சொல்கிறார். அதற்குள் பசுபதியின் ஆட்கள் வெண்ணிலாவை தாக்க வர, காவிரி விரட்டி அடிக்கிறார். பின் அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. கொந்தளித்த காவிரி, உயர் அதிகாரி வரும் வரை இங்கிருந்து போக மாட்டேன். வெண்ணிலாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஹாஸ்பிடலில் இருக்கிறார். காவிரிக்கு துணையாக நிவினும் அங்கே இருக்கிறார். இன்னொரு பக்கம் யமுனா வீட்டிற்கு நிவின் வரவில்லை என்று கோபப்பட்டு கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் நிவின், காவிரியை வீட்டுக்கு போக சொல்கிறார். ஆனால், காவிரி மறுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






