விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி மேட்ரிமோனியில் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் செய்து விட்டார். இதை எல்லாம் பார்த்து விஜய்க்கு கடுப்பாகிறது. பின் கோபத்தில் காவிரியை நடு ரோட்டிலேயே விட்டுவிட்டு விஜய் வந்தார். பின் இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதற்குப்பின் விஜய், காவிரி அழைத்து செல்ல வருகிறார். கோவத்தில் காவிரி முடியாது என்றார். பின் ஒரு வழியாக காவிரியை சமாதானம் செய்து விஜய் அழைத்து வந்தார்.

விஜய், தன்னுடைய தாத்தாவிடம் காவிரி செய்த வேலை எல்லாம் சொல்லி புலம்பினார். அதற்குப்பின் யமுனா- கங்கா இருவரும் விஜய்க்கு போன் செய்து பேசி இருந்தார்கள். அப்போது விஜய், ரொம்ப வருத்தத்துடன் காவிரி தனக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொன்னார். இருவருமே விஜய்க்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் காவேரி தன்னுடைய அம்மாவிடம் விஜய் நடந்து கொண்ட விஷயத்தை எல்லாம் சொன்னார்.
மகாநதி:
அதோடு விஜயை மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் மேட்ரிமனியில் தனக்கு யாரும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விஜய்க்கு மட்டும் நிறைய பெண்கள் ஓகே சொல்லி இருக்கும் விஷயத்தை காவிரி, சாரதாவிடம் சொன்னார். பின் காவேரி, பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். விஜய், நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்றார். உடனே காவிரி, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்தார். அவரிடம் பேசப்போகிறேன் என்றார். இதனால் விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வேதனைப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி வேறொரு பையனை பார்க்க செல்லும் விஷயத்தை பற்றி விஜய், தாத்தாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு தாத்தா சோமு, ஆறுதல் சொல்கிறார்.
இன்னொரு பக்கம் காவேரி சூப்பராக தயாராகி செல்கிறார். சாரதா, எங்கே என்று கேட்கிறார். காவிரி, ஒரு பையனை சந்திக்க செல்லும் விஷத்தை சொல்கிறார். அதற்குப்பின் விஜய்யும், காவிரி சொன்னதால் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக காபி ஷாப் போகிறார்.

சீரியல் ட்ராக்:
அங்கு விஜய் அந்த பெண்ணுடன் பேசாமல் காவேரி எங்கு சென்று இருப்பார்? யாரை பார்த்து பேசி இருப்பார்? என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த பெண் சொல்வதை காது கொடுத்து கூட விஜய் கேட்கவில்லை. பின் தொடர்ந்து விஜய், காவிரிக்கு போன் செய்கிறார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் போனை எடுத்து திட்டி வைத்து விடுகிறார். காவிரி ரொம்ப ஜாலியாக தன்னை பார்க்க வந்த நபருடன் பேசிக் கொண்டிருக்கிறார். பின் விஜய் கோயில், காபி ஷாப் என்று காவிரியை தேடி செல்கிறார். ஒரு கட்டத்தில் காவிரி ஒரு கடையில் டீ குடித்து இருப்பதை பார்த்து விடுகிறார் விஜய்.






