விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு விஜய் சென்றார். வீட்டிற்கு வந்த காவிரி, விஜயின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் காவிரியும் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுவதால் தயாரானார். இன்னொரு பக்கம் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, விஜய்- காவிரி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். காவிரிக்கு பழைய ஞாபகம் வரவில்லை என்றாலும் நாமே திருமண ஏற்பாடு செய்து இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்றார்.

தாத்தா, காவிரியின் வீட்டிற்கு செல்லும் விஷயத்தைப் பற்றி விஜய்யிடம் சொன்னார். விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோரும் காவிரியின் வீட்டிற்கு போனார்கள். அப்போது சோமு, விஜய்- காவேரி இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்கலாம். காவிரியிடம் பேசி சம்மதம் வாங்குங்கள் என்றார். சாரதா சரி என்கிறார். பின் இதைப் பற்றி சாரதா, கங்கா- யமுனாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். அவர்களுமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
மகாநதி:
சாரதா, எப்படி காவிரியிடம் சம்மதம் வாங்குவது தெரியவில்லை என்றார். அதற்கு பின் சாரதா, உனக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார். காவிரி ரொம்பவே சந்தோஷப்பட்டு என்ன காரணம் சொன்னீர்கள் என்றார். சாரதா, நெருக்கமான சொந்தத்திலேயே காவிரியை கேட்டிருக்கிறார்கள். அவர்களை தான் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். காவிரி, நிஜமாகவே அவர்கள் உன்னை பெண் கேட்டு வந்தார்களா? யார் என்றார். சாரதா, விஜயின் வீட்டில் தான் வந்தார்கள் என்று சொல்கிறார். காவேரி ஷாக் ஆகி நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, அவர்களுக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படி எல்லாம் கேட்டிருப்பார்கள். இதை நான் சும்மா விட மாட்டேன் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். சாரதா எவ்வளவோ சமாதானம் செய்தும் காவேரி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து விஜய்-அம்மு இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். காவிரி, விஜய்யை முறைத்துக் கொண்டே அம்முவை உள்ளே அழைத்து செல்கிறார். அதற்கு பின் சாரதா, விஜய்யின் தாத்தா வந்து சென்ற விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட விஜய், தன்னுடைய வீட்டிற்கு சென்று சண்டை போடுகிறார். சோமு, அன்பரசு எல்லோருமே எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்கள். கோபத்தில் விஜய், என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன். தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் காவேரி, குழந்தையை நானே வீட்டில் விட்டு அவர்களுக்கு வார்னிங் கொடுத்து விட்டு வருகிறேன். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. என்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ள தெரியும் என்று சாரதா விடம் ரொம்ப கடுமையாக நடந்து கொள்கிறார்.






