விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, தான் திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திகை சந்தித்து பேசி இருந்தார். இருவருமே தங்கள் திருமணத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதைப்பற்றி நிவின், விஜயை சந்தித்து பேசி இருந்தார். விஜய், பார்த்துக் கொள்ளலாம். காவிரி எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டாள் என்றார். அதற்கு பின் அம்முவிடம் விஜயின் சித்தி, காவிரி வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போவதை பற்றி சொன்னார். இதனால் அம்மு ரொம்பவே சோகமாக இருந்தார். பின் காவிரி எடுத்த முடிவால் சாரதா கோபப்பட்டார்.

காவிரி, நான் கார்த்திகை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய வீட்டில் இருந்து என்னை பார்ப்பதற்கு இங்கு வருகிறார்கள் என்றார். சாரதா, யாரை கேட்டு முடிவெடுத்தாய். எங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீ விஜய் தான் திருமணம் செய்து கொள்ளணும் என்றார். இதனால் காவேரி, சாரதாவிற்கு இடையே பயங்கர கலவரம் வெடிக்கிறது. இன்னொரு பக்கம் விஜயின் சித்தி- தாத்தா எல்லோருமே காவிரி- விஜயை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் விஷயத்தைப் பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார்கள்.
மகாநதி:
இதையெல்லாம் கவனித்து அம்மு வருத்தப்பட்டார். மறுநாள் காலையில் விஜய் வாக்கிங் முடித்துவிட்டு வரும்போது வீட்டில் அம்மு இல்லை.எல்லா இடத்திலேயுமே தேடிப் பார்த்தார். ஆனால், அம்மு- காவிரியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். விஜய், அம்முவை தேடி அலைந்து கொண்டிருந்தார். அம்மு, காவேரி வீட்டிற்கு வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வந்த நிவின், அமுவை பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார். விஜய் இடம் நடந்தது எல்லாம் நிவின் சொன்னார். விஜயும் அம்முவை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் நிவின் காவிரியிடம் அம்மு செய்த விஷயத்தை பற்றி சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, இதற்கெல்லாம் காரணம் நீதான். நீ விஜயை கல்யாணம் செய்து கொண்டால் இந்த பிரச்சனை இல்லை என்று சொல்கிறார். இதனால் கொந்தளித்த காவிரி, எதற்காக மொத்த குடும்பமே விஜய்க்கு சப்போர்ட் செய்கிறீர்கள். என்னுடைய விருப்பத்தை பார்க்க மாட்டீர்களா? என்று கேட்கிறார். சாரதா, தெரியாத ஒருத்தனை திருமணம் செய்து கொள்வதற்கு பதில் விஜய்யை செய்து கொள். விஜய் தம்பி ரொம்ப நல்லவர். உன்னை நன்றாக பார்த்துக் கொள்ளுவார் என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறார். இதனால் ஒரு கட்டத்தில் கொந்தளித்த காவிரி, என்னை புரிந்து கொள்ளாத இந்த குடும்பம் எனக்கு தேவையில்லை என்று சண்டை போட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் விஜய், காவிரி இருவரும் பேசிக் கொள்கிறார்கள். காவிரி, குழந்தையை வைத்து டிராமா போடுகிறீர்களா? நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் இப்படி எல்லாம் செய்கிறீர்களா? என்று மோசமாக பேசுகிறார். நீங்கள் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் உங்களிடம் திருமணத்தை பற்றியும் என் குழந்தையை பற்றியும் பேசமாட்டேன் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் அம்மு வரவில்லை. காவேரி, அம்முவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு காவிரியை தவிர எல்லோருமே சென்றிருக்கிறார்கள். அம்முவுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜய், காவிரி சொன்னதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்






