விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பள்ளியில் விழா தொடங்குகிறது. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அம்மாவுடன் வந்து பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். விஜய் என்ன நடக்குமோ என்று கவலையில் இருந்தார். அப்போது காவேரி-அம்மு இருவரும் சேர்ந்து மேடையில் நடனம் ஆடினார்கள். அதை பார்த்து விஜய் எமோஷனாக அழுதார். பின் விஜய், அவர்கள் நடனமாடியதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார்.

பள்ளியில் நடந்த விழாவில் காவேரி அம்மு இருவரும் தான் வெற்றி பெற்றார்கள். இதனால் இருவருக்கும் பரிசும் கிடைத்தது. இதையெல்லாம் பார்த்து விஜய் ரொம்ப எமோஷனலானார். அதற்குப்பின் நான்கு பேருமே ஹோட்டலுக்கு போனார்கள். அங்கு சந்தோஷமாக பள்ளியில் நடந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சாரதா, நீதானே அவளுடைய அம்மா. அவளை பற்றி உனக்கு தெரியாதா? என்று உளறி விட்டார். காவிரிக்கு ஒன்னுமே புரியவில்லை. விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்.
மகாநதி:
விஜய், அம்முவுக்காக பார்த்து பார்த்து செய்யும் விஷயத்தை எல்லாம் நினைத்து காவிரி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்கு பின் நர்மதா வீட்டிற்கு வந்து விட்டார். நர்மதாவை பார்ப்பதற்காக கங்கா- யமுனா வீட்டிற்கு வந்தார்கள். பின் நான்கு சகோதரிகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள். அதோடு விஜய்- அம்மு இருவருமே நர்மதாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அதற்குப்பின் தாத்தா சொன்னதால் காவேரி, விஜயின் வீட்டிற்கு போனார். அப்போது பள்ளியில் அம்முவை நன்றாக பார்த்துக் கொண்டதற்காக ஒரு சின்ன பரிசை கொடுத்தார். காவிரியும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், அவசர வேலை என்பதால் வெளியே சென்று விடுகிறார். பின் காவேரி- அம்மு இருவரும் விஜயன் ரூமிற்கு சென்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவேரி, அம்முவிற்கு தெரியாமல் விஜயினுடைய அறையை திறந்து பார்க்கிறார். அங்கு டைரி இருக்கிறது. டைரிக்கு அடியில் காவிரி- விஜய் சேர்ந்திருக்கும் போட்டு இருக்கிறது. ஆனால், அதை காவிரி கவனிக்கவில்லை. டைரியை மட்டும் காவிரி எடுக்கிறார். விஜய், தன் மனைவியை பற்றி உருகி உருகி எழுதி இருக்கும் விஷயத்தை எல்லாம் படிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை பார்த்து காவிரிக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. பின் அந்த டைரியை காவிரி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்கிறார். பின் காவிரியை விஜய் வீட்டில் விட்டு வருகிறார். அப்போது காவிரி, விஜய்யின் மனைவியை பற்றி பேசி கொண்டு இருக்கிறார். அதற்குப்பின் காவிரி வீட்டில் சகோதரிகள் சந்தோஷமாக சாப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது நிவின் வருகிறார். நிவின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.






