விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், உங்களுக்கு அம்முவை ரொம்ப பிடித்திருக்கிறது. என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னது தான் எனக்கு பிடிக்கவில்லை. நானே உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டார். இதனால் காவேரி மீண்டும் விஜய் மீது கோபப்பட்டு சென்றார். அதற்குப் பின் காவிரியின் வீட்டிற்கு வந்த விஜய், சாரதாவிற்கு போன் வாங்கி வந்து தந்தார். அதெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் பள்ளியில் நடக்கும் மதர்ஸ் டே விழாவில் அம்மு அம்மாவாக நான் தான் கலந்து கொள்ளப் போகிறேன் என்றார். இதை கேட்டு சாரதாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பின் இதைப்பற்றி சாரதா, கங்கா- யமுனாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.

பள்ளியில் என்ன நடக்குமோ? என்று விஜய் ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அம்முவும் தன் அம்மா நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அதற்குப் பின் பள்ளியில் மதர்ஸ் டே விழா நடைபெறுகிறது. எல்லா மாணவர்களும் தங்களுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. பின் காவேரி, அம்முவை தனியாக அழைத்து செல்கிறார். அம்முவிற்கு நடனம் சொல்லிக் கொடுத்தார் காவிரி.
மகாநதி:
இதை எல்லாம் பார்த்து விஜய்க்கு சந்தோசமாக இருக்கிறது. பின் பள்ளியில் விழா தொடங்குகிறது. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அம்மாவுடன் வந்து பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். விஜய் என்ன நடக்குமோ என்று கவலையில் இருந்தார். அப்போது காவேரி-அம்மு இருவரும் சேர்ந்து மேடையில் நடனம் ஆடினார்கள். அதை பார்த்து விஜய் எமோஷனாக அழுதார். பின் விஜய், அவர்கள் நடனமாடியதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார்.

சீரியல் ட்ராக்:
பள்ளியில் நடந்த விழாவில் காவேரி அம்மு இருவரும் தான் வெற்றி பெற்றார்கள். இதனால் இருவருக்கும் பரிசும் கிடைத்தது. இதையெல்லாம் பார்த்து விஜய் ரொம்ப எமோஷனலானார். அதற்குப்பின் நான்கு பேருமே ஹோட்டலுக்கு போனார்கள். அங்கு சந்தோஷமாக பள்ளியில் நடந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சாரதா, நீதானே அவளுடைய அம்மா. அவளை பற்றி உனக்கு தெரியாதா? என்று உளறி விட்டார். காவிரிக்கு ஒன்னுமே புரியவில்லை. விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், அம்முவுக்காக பார்த்து பார்த்து செய்யும் விஷயத்தை எல்லாம் நினைத்து காவிரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் நர்மதா வீட்டிற்கு வந்து விடுகிறார். நர்மதாவை பார்ப்பதற்காக கங்கா- யமுனா வீட்டிற்கு வருகிறார்கள். பின் நான்கு சகோதரிகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொள்கிறார்கள். அதோடு விஜய்- அம்மு இருவருமே நர்மதாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார்கள். அதற்குப்பின் தாத்தா சொன்னதால் காவேரி, விஜயின் வீட்டிற்கு போகிறார். அப்போது பள்ளியில் அம்முவை நன்றாக பார்த்துக் கொண்டதற்காக ஒரு சின்ன பரிசை கொடுக்கிறார். காவிரியும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.






