விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நிவின், காவிரியின் குழந்தையை பார்த்து எமோஷனல் ஆனார். அதற்குப்பின் நிவின், விஜய் இருவரும் சந்தோஷமாக குடித்துக்கொண்டு பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிவின், ஆரம்பத்தில் என்னுடைய கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சீக்கிரத்திலேயே உங்களையும் காவிரியையும் சேர்த்து வைப்போம் என்றெல்லாம் சொன்னார். விஜய்யும் சந்தோஷப்பட்டார்.

கங்கா மீண்டும் மீண்டும் காவிரியின் திருமணத்தை பற்றிய பேசி கொண்டிருந்தார். காவேரி, என்ன சொன்னாலும் நான் விஜய்யை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீங்கள் வேறொரு மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்லி விட்டார். இதனால் கங்கா- யமுனா இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் கங்காவின் மகள் நோட்டு கேட்டதால் காவிரி அட்ட போட்டியில் இருந்து சில நோட்டுகளை எடுக்கப் போனார். ஆனால், அங்கு விஜயின் அப்பள விளம்பரத்திற்கான நோட்டீஸ் இருக்கிறது.
மகாநதி:
அதை பார்த்தவுடன் காவேரி ஷாக் ஆனார். பின் இதை பற்றி கங்கா, யமுனாவிடம் காவிரி கேட்டார். அவர்களும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். இருந்தாலும் காவிரிக்கு அதில் நம்பிக்கை இல்லை. பின் இதைப்பற்றி விஜய் இடம் கேட்பதற்காக அவருடைய வீட்டிற்கு கிளம்பினார் காவிரி. விஜயின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, விஜயின் அப்பளம் விளம்பர நோட்டீசை காண்பித்தார். அதை பார்த்தவுடன் விஜய் தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்த்து சந்தோசப்பட்டார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், அந்த அப்பளம் விளம்பரம் எப்பவோ செய்தது என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் விஜய் வேலை இருப்பதால் வெளியே சென்று விடுகிறார். காவிரி, அம்முவுடன் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கவனித்த விஜயின் சித்தி
சந்தோஷப்படுகிறார். பின் காவிரியிடம் விஜயின் சித்தி, நீ அம்முவைய நன்றாக பார்த்துக் கொள்கிறாய். உன்னுடைய மகள் போலவே நினைக்கிறாய். விஜயை திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார். காவிரி அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார். உடனே விஜய்யின் சித்தி, ரொம்ப கோபமாகவும் கண்டிப்பாகவும் பேசுவதால் காவிரி பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்டு காவிரி அங்கிருந்து சென்று விடுகிறார். இதையெல்லாம் கவனித்த அம்மு, தன் தந்தை விஜய் வந்தவுடன் சொல்கிறார். விஜய், எதற்காக இப்படி செய்தீர்கள்? நானே பேசிக்கொள்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் நிவின், காவிரியிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்கிறார். காவிரி, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார். எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்






