விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் டாக்டர், அம்மை போட்டால் எல்லோருக்குமே குழந்தையை பாதிக்கும் என்று அர்த்தம் இல்லை. பாசிட்டிவாக தான் நடக்கும். உங்கள் மனைவியை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் விஜய், காவிரிக்கு வீடியோ கால் செய்து டாக்டரிடம் பேச வைத்தார். டாக்டருமே காவிரிக்கு அறிவுரை சொன்னார். அதற்குப்பின் விஜய் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் குமரன், நிவின் இருவருமே பசுபதியை பற்றி விசாரித்தார்கள். அப்பொழுது வெளியே வந்த விஜய், பசுபதியை பத்தி ஏதாவது தெரிந்ததா? என்று கேட்டார். குமரன், எதுவுமே தெரியவில்லை. நீங்கள் வெளியில் வராதீர்கள் என்று சொன்னார்.

அதற்கு பின் நிவின், காவிரிக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு விஜய், அந்த விஷயமாக தான் டாக்டரிடம் பேச வந்தேன். குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று காவிரி ரொம்ப பயப்படுகிறாள் என்று சொல்லி வேதனைப்பட்டார். உடனே நிவின், விஜய்க்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த விஜயிடம் ஓனர் மாமி, நீங்கள் காவிரி இருக்கும் ரூமில் வேப்பிலையை கட்டி விடுங்கள். நிறைய பழங்கள், குளிர்ச்சியான பொருட்களை கொடுத்தால் சீக்கிரம் குணமாகி விடும் என்று சொன்னார். இதனால் விஜயும் காவிரி இருக்கும் ரூமிற்கு வெளியே வேப்பிலை கட்டிவிட்டு காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்தார். இதை பார்த்து காவேரி சந்தோஷப்பட்டார்.
மகாநதி சீரியல்:
விஜய், காவிரியை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரியிடம் பேசுவதற்கு கங்கா வந்தார். ஆனால், கதவை திறக்காமல் தான் காவிரி பேசிக் கொண்டிருந்தார். கங்கா- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கங்காவின் மாமியார் கங்காவை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் காவிரிக்கு அம்மை அதிகமாகி இருப்பதை பார்த்து விஜய் ரொம்பவே பயப்பட்டார். ஆனால், அதை காவிரியிடம் காட்டிக் கொள்ளவில்லை. மறுநாள் காலையில் காவிரியின் அம்மா சாப்பாடு எடுத்துக்கொண்டு காவிரி பார்க்க வந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது காவிரி, அப்பளம் அனுப்புவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்து குமரன், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். அதற்க்கு பின் குமரன், அப்பளத்தை எல்லாம் ரெடி செய்து கொண்டிருக்க, அதை பார்த்த குமரனின் அம்மா, உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. உன்னை இந்த வீட்டில் வேலைக்காரனாக தான் பார்க்கிறார்கள் என்று வழக்கம்போல காவிரியின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினார். இதையெல்லாம் கேட்ட காவிரியின் அம்மா எதுவும் பேசாமல் மனம் உடைந்து இருந்தார். பின் கங்காவிடம் அவர், நீயும் குமரனும் இங்கே இருங்கள். நாங்கள் தனியாக சென்று விடுகிறோம் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்க்கு போன் செய்த தாத்தா, ஒருவேளை வெண்ணிலாவிற்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்த கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிடும். லாயர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறார். நீ எதற்கும் கவனமாக இரு என்று சொல்கிறார். அதற்கு விஜய், சரி நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு காவிரி ரொம்ப பயப்படுகிறார். இன்னொரு பக்கம் குமரன், தன் அம்மாவை அழைத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றிருக்கிறார். அங்கு காவிரி குடும்பத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு குமரன் அம்மா, நான் இனிமேல் அவர்களை பற்றி பேச மாட்டேன் என்கிறார். இன்னொரு பக்கம் கங்கா, காவிரி நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு அவருக்கு போன் செய்து பேசுகிறார். காவிரி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகிவிடும். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் காவிரி மொபைலில் அம்மா போட்டிருந்தால் குழந்தைக்கு பிரச்சனையாகுமா? என்பதை பற்றி வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு அம்மை போட்டு இருந்தால் குழந்தை பிறந்தவுடன் நோய் வாய் பட்டு இறந்து விடும் என்று சொல்லப்பட்டது. இதை பார்த்தவுடன் காவேரி ரொம்ப எமோஷனாக கதறி அழுகிறார். விஜய் ஆறுதல் சொல்லியுமே அவர் கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது






