விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், குமரனை வைத்து காவிரி- விஜய் விவாகரத்தை பற்றி அவருடைய அம்மா பேசி இருந்தார். காவிரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் காவிரியை அழைத்துக் கொண்டு நிவின், குமரன் இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது காவிரி, உங்களுக்கு விஜய் சித்தி சொன்ன விஷயம் தான் தெரியும். அதற்கு முன் நான் விஜயுடன் கிளம்ப தயாராக இருக்கும்போது விஜயின் பாட்டி என்னை கோயிலுக்கு அழைத்து, நீ வீட்டிற்கு வரக்கூடாது. விஜயின் வாழ்க்கை விட்டு போ என்றெல்லாம் சொன்னார் என்றார்.

விஜயின் பாட்டி சொன்னதை கேட்டு நிவின், குமரன் இருவருமே ஷாக் ஆனார்கள். பின் நிவின், விஜய் விவாகரத்து விஷயத்தை பற்றி பேசி இருக்க மாட்டார். இது பாட்டியோட வேலையாக தான் இருக்கும் என்று சொன்னார். உடனே விஜய்க்கு போன் செய்த நிவின், காவேரி பற்றி பேசியவுடன் விஜய் கோபப்பட்டு போனை கட் செய்தார். மறுநாள் காலையில் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்குவதற்காக பாட்டி, சித்தி இருவருமே வந்திருந்தார்கள். அப்போது காவிரி, எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் பேசிவிட்டு தான் முடிவெடுப்பேன் என்றார்.
மகாநதி:
கடைசியில் கோவப்பட்ட காவிரி, விஜய் இடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு விடாமல் போன் செய்தார். ஒரு கட்டத்தில் விஜய் திரும்ப போன் செய்தார். ஆனால், காவிரியின் அம்மா போனை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுத்தார். அப்போது காவேரி அம்மா, உனக்கும் விஜய்க்கும் என்ன உறவு? ஏன் அவனை விவாகரத்து செய்ய மாட்டுகிறாய் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு கோபத்தில் காவிரி, நான் மனைவியாக நடிக்கப் போனாலும் மனதார அவருடன் வாழ்ந்தேன். நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் காவேரி குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் காவிரி, இந்த விஷயம் எனக்கே லேட்டாக தான் தெரியும். விஜய் எனக்காக தான் இங்கு வந்தார். பின் விஜய்க்கு குழந்தை விஷயம் தெரிந்தது, தாங்கள் வாழ்ந்தது, விஜய் தன்னை பார்த்துக் கொண்டது பற்றியெல்லாம் தன் அம்மாவிடம் சொன்னார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்- காவிரியை சேர்த்து வைப்பது பற்றி பேசினார்கள். உடனே குமரனிடம் காவிரி அம்மா, விஜய்யை அழைத்து வர சொன்னார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வாய்ஸ் மெசேஜில் நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்யை நினைத்து அவரின் பாட்டி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து நிவின்- குமரன் இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது நிவின், விஜய் எங்கே இருக்கிறார்? என்றார். கோபத்தில் பாட்டி, அவன் எங்கு இருந்தால் உங்களுக்கு என்ன ப்ரச்சனை? உங்கள் சவுகாசமே தேவையில்லை என்று அவர்கள் இருவரையும் திட்டி அனுப்பி விடுகிறார். தாத்தா தடுத்துமே பாட்டி கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காவிரி- கங்கா இருவருமே ரொம்ப எமோஷனலாக குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு நிவின்-குமரன் இருவருமே வருகிறார்கள். அப்போது குமரன், விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லா இடத்திலுமே பார்த்து விட்டோம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு காவிரியின் அம்மா கோபப்பட்டு பேசுகிறார். அதற்கு காவிரி, நீ எதையும் யோசி யோசிக்காதே. விஜயால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வந்து விடுவார் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் காவிரி அனுப்பிய மெசேஜை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார். மறுநாள் காலையில் காவேரி, விஜய்க்கு போன் மேல் போன் செய்கிறார். கோபத்தில் விஜய் போன் எடுக்கவில்லை. அதற்கு பின் போன் எடுத்த விஜய், என்ன பிரச்சனை என்கிறார். அப்போது காவிரி, ஏன் மெசேஜை பார்த்து எனக்கு போன் செய்யவில்லை என்று கேட்கிறார். விஜய், எதற்காக பண்ணனும் என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






