விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரியை பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்க்கே வந்து விட்டார். விஜய்யை பார்த்தவுடன் காவிரி ஷாக் ஆகி, இங்கே எதற்கு வந்தீர்கள்? தயவு செய்து கிளம்புங்கள் என்று சொன்னார். அதற்கு விஜய், உனக்கு உடம்பு சரியில்லாமல் போது நான் எப்படி போவேன். நான் இங்கே இருந்து உன்னை பார்த்துக்கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே, பயப்படாதே என்று சொன்னார். மறுநாள் காலையில் விஜய், காவிரி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரியின் அம்மா கதவை தட்டினார் எதுவுமே தெரியாமல் விஜய் கதவை திறந்துவிட்டார். ஆனால், காவேரி அம்மா கங்காவிடம் பேசிக் கொண்டிருப்பதால் விஜயை பார்க்கவில்லை.

உடனே விஜய் ஒளிந்து கொள்ள, காவிரி பதறி அடித்துக் கொண்டு எழுந்து, தன் அம்மாவிடமிருந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்புங்கள் என்று சொன்னார். அதற்கு அவர், என்னாச்சு? உடம்பில் வேற ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேட்டார். ஏதேதோ சொல்லி காவிரி சமாளித்து தன் அம்மாவை அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய் ஹாஸ்பிட்டலுக்கு போனார். அங்கு விஜய், காவிரிக்கு அம்மை போட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு டாக்டர், சில அம்மை குழந்தைக்கு பாதிப்பு தராது. ஆனால், சில அம்மையால் குழந்தைக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடன் விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் டாக்டர், அம்மை போட்டால் எல்லோருக்குமே குழந்தையை பாதிக்கும் என்று அர்த்தம் இல்லை. பாசிட்டிவாக தான் நடக்கும். உங்கள் மனைவியை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் விஜய், காவிரிக்கு வீடியோ கால் செய்து டாக்டரிடம் பேச வைத்தார். டாக்டருமே காவிரிக்கு அறிவுரை சொன்னார். அதற்குப்பின் விஜய் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் குமரன், நிவின் இருவருமே பசுபதியை பற்றி விசாரித்தார்கள். அப்பொழுது வெளியே வந்த விஜய், பசுபதியை பத்தி ஏதாவது தெரிந்ததா? என்று கேட்டார். குமரன், எதுவுமே தெரியவில்லை. நீங்கள் வெளியில் வராதீர்கள் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
அதற்கு பின் நிவின், காவிரிக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு விஜய், அந்த விஷயமாக தான் டாக்டரிடம் பேச வந்தேன். குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று காவிரி ரொம்ப பயப்படுகிறாள் என்று சொல்லி வேதனைப்பட்டார். உடனே நிவின், விஜய்க்கு ஆறுதல் சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த விஜயிடம் ஓனர் மாமி, நீங்கள் காவிரி இருக்கும் ரூமில் வேப்பிலையை கட்டி விடுங்கள். நிறைய பழங்கள், குளிர்ச்சியான பொருட்களை கொடுத்தால் சீக்கிரம் குணமாகி விடும் என்று சொன்னார். இதனால் விஜயும் காவிரி இருக்கும் ரூமிற்கு வெளியே வேப்பிலை கட்டிவிட்டு காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்தார். இதை பார்த்து காவேரி சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜய், காவிரியை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது காவிரியிடம் பேசுவதற்கு கங்கா வருகிறார். ஆனால், கதவை திறக்காமல் தான் காவிரி பேசிக் கொண்டிருக்கிறார். கங்கா- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கங்காவின் மாமியார் கங்காவை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் காவிரிக்கு அம்மை அதிகமாகி இருப்பதை பார்த்து விஜய் ரொம்பவே பயப்படுகிறார். ஆனால், அதை காவிரியிடம் காட்டிக் கொள்ளவில்லை. மறுநாள் காலையில் காவிரியின் அம்மா சாப்பாடு எடுத்துக்கொண்டு காவிரி பார்க்க வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது காவிரி, அப்பளம் அனுப்புவது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்து குமரன், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே காவிரி என்று ஆறுதல் சொல்கிறார். அதற்க்கு பின் குமரன், அப்பளத்தை எல்லாம் ரெடி செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த குமரனின் அம்மா, உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. உன்னை இந்த வீட்டில் வேலைக்காரனாக தான் பார்க்கிறார்கள் என்று வழக்கம்போல காவிரியின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினார். இதையெல்லாம் கேட்ட காவிரியின் அம்மா எதுவும் பேசாமல் மனம் உடைந்து இருக்கிறார். பின் கங்காவிடம் அவர், நீயும் குமரனும் இங்கே இருங்கள். நாங்கள் தனியாக சென்று விடுகிறோம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






