விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஜெயிலில் விஜய், காவேரியை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் காவேரி, என்னால் தான் உங்களுக்கு இந்த நிலைமை. நீங்கள் என்னை திருமணம் செய்திருக்க கூடாது. என்னுடைய நேரம் தான் உங்களை எல்லாம் இப்படி செய்கிறது என்று ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். அதற்கு விஜய், நீ கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதே. வெளியில் எடுப்பதற்கான வேலையை மட்டும் பார்க்கலாம் என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் ராகினியை சந்தித்து நிவின் பேசி இருந்தார். நிவின் ரொம்ப அமைதியாகவும் அன்பாகவும் பேசி இருந்தார்.

கடைசியில் பசுபதி பத்தி பேசிய உடன் ராகினி புரிந்து கொண்டு அதற்கான பதிலை சொல்லாமல் என்னென்னவோ பேசி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி, யமுனாவை பார்த்து எதற்கு நீ இங்கு இருக்கிறாய்? வீட்டிற்கு கிளம்பு என்று சண்டை போட்டார். அந்த சமயம் கங்கா, மிஷின் விஷயமாக பேசப்போனாயே என்ன நடந்தது என்று கேட்க, காவிரியும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார். இதை எல்லாம் பார்த்து காவேரி அம்மாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் கங்காவிடம் காவிரி, ஜெயிலில் நடந்ததை பற்றி பேசி எமோஷனல் ஆக பேசி அழுதார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் காவேரி, போலீஸிடம் ரொம்ப கெஞ்சி கேட்டு கதறிய பிறகுதான் என்னை விஜய்யை பார்க்க விட்டார்கள். அவரை பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ரொம்பவே அழுதார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் குமரன் இடம் கங்கா, காவிரியை நினைத்தால் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. யமுனா தான் விஜயை போலீஸிடம் மாட்டி விட்டாள். காவிரி- நிவினை பற்றி ரொம்ப தப்பாக பேசுகிறார் என்று சொன்னார். அதற்கு குமரன், என்னிடமும் ஏற்கனவே இப்படி யமுனா சொல்லி இருந்தார். ஏன் இப்படி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. எப்படியாவது விஜய்யை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் நிவின், ராகினி இடம் பசுபதியை பற்றி பொறுமையாக பேசி விசாரித்தார். ஆனால், ராகினி சுதாரித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார். அதற்குப்பின் நிவினை சந்தித்த குமரன், யமுனா தான் விஜய்யை போலீஸில் சிக்க வைத்திருக்கிறார் என்று நடந்ததை சொன்னவுடன் நிவினுக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவை சந்திக்க காவிரி, ஹாஸ்பிடல் போயிருந்தார். அங்கிருந்த நர்ஸ், வெண்ணிலாவிடம் மாற்றம் தெரிகிறது என்று சொன்னதால் காவிரி வெண்ணிலாவிடம் பேசினார். கடைசியில் வீட்டிற்கு வந்த நிவின், எதற்காக விஜய்யை போலீசில் மாட்டி விட்டார் என்று கேட்க, யமுனா மோசமாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் யமுனா, நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு விஜய்யை பகடைக்காயாக வைத்திருந்தீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் கோபத்தில் நிவின் யமுனாவை அடிக்கப் போகிறார். இருந்தாலுமே யமுனா கேட்காமல் காவிரியை பற்றி தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் நிவின் அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் சென்ற குமரன், வெண்ணிலா மாமாவின் உடைய அட்ரஸை எப்படியோ பேசி வாங்கி விடுகிறார். பின் அவரின் ஊருக்கு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் நிவின், ராகினியை சந்தித்து பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது நிவின், பசுபதி இருக்கும் இடத்தை பற்றி மெதுவாக பேசி வாங்க பார்க்கிறார். ஆனால், ராகினி
சொல்லவே இல்லை. சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலா மாமாவின் ஊருக்கு சென்ற குமரன், அங்கு இருப்பவர்களிடம் எல்லாம் விசாரிக்கிறார். பின் காவேரிக்கு போன் செய்த குமரன், வெண்ணிலா கண்டிஷன் எப்படி இருக்கு என்று பார் என்கிறார். இதனால் காவிரியுமே ஹாஸ்பிடலுக்கு போகிறார். ஆனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலமாக இருப்பதால் காவேரி ஒழிந்து கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






