ராகினி கழுத்தில் தாலி கட்டிய நிவின் – லீக்கான புகைப்படம். பரபரப்பான கட்டத்தில் மகாநதி

0
427
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா என்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்தத் தொடரின் ஹீரோ நிவின்- காவிரி காதலிக்கிறார்கள். மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து விடுகிறார். இதை அனைத்தையும் காவேரி தெரிந்து கொள்கிறாள். பின் பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனால், நிவினும் காவிரியும் பசுபதியின் உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலபடுத்தி காட்டுகிறார்கள். இந்த நிலையில் நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை காரணத்தினால் இவர்கள் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு சென்று விடுகிறார்கள்.

- Advertisement -

மகாநதி சீரியல்:

காவிரி அசிங்கப்படுத்தியதால் பசுபதி மொத்த குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கிறார். பின் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய். பின் தாங்கள் கொண்டு வந்த மொத்த பணத்தையும் குமரன் தொலைத்து விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள்.

சீரியல் கதை:

இதனைப் பார்த்து விஜய் வீட்டார், காவேரி குடும்பம் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். இன்னொரு பக்கம் காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். காவிரி தன் குடும்பத்திற்காக விஜியிடம் வேலை செய்து உதவி செய்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் – காவிரி திருமணம் காண்ட்ராக்ட் என்பது தாத்தாவிற்கு தெரிய வருகிறது. இதை தெரிந்தும் தெரியாமல் போல் தாத்தா அமைதியாக நிற்கிறார். பின் இருவரையும் கொடைக்கானல் அனுப்பி வைக்கிறார். மேலும், கடந்த வாரம் எபிசோடில் காவிரி குடித்துவிட்டு தன் மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கொடைக்கானல் சென்ற விஜய்-காவேரி:

அப்போது காவேரி தன்னுடைய காதலன் நிவின் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். பின் இருவரும் ஜாலியாக ஃபன் செய்து கொண்டு விளையாடி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் எபிசோட்டில் நிவினை பசுபதியின் ஆட்கள் கடத்திக் கொண்டு சென்று அவருடைய மகள் ராகினி கழுத்தில் தாலி கட்ட சொல்லி மிரட்டுகிறார்கள். ஆனால், நிவின் முடியாது என்று மறுக்கிறார். இதனால் காவிரியை கடத்தி வைத்துக்கொண்டு அவரை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

நிவின் என்ன செய்வதென்று புரியாமல் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். இன்னொரு பக்கம் காவேரியை நினைத்து கொண்டு இருக்கிறார் விஜய். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பசுமதி மகளுக்கு நிவின் தாலி கட்டுவது போல காண்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம் காவிரியின் கழுத்தில் கத்தியை வைத்து பசுபதி மிரட்டுகிறார். இப்படி ஒரு நிலையில் நிவின் பசுபதி மகள் கழுத்தில் தாலி கட்டியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது லீக் ஆகி இருக்கிறது.

Advertisement