விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் பாட்டி காவிரிக்கு போன் செய்து கோவிலுக்கு வர வைத்தார். அப்போது காவிரியிடம் விஜயின் பாட்டி, நீ விஜயுடன் சேர்ந்து வாழ நினைக்கிறாயா? அந்த எண்ணத்தை மாற்றிக்கொள். உன்னால்தான் என் பேரனுக்கு இவ்வளவு பிரச்சனை. உன்னால் மீண்டும் பசுபதி என் பேரனுக்கு தொந்தரவு தருவான். தயவு செய்து விஜயின் வாழ்க்கையை விட்டு சென்று விடு என்றெல்லாம் திட்டி இருந்தார். அதனால் காவிரி எதுவும் பேச முடியாமல் அழுதார். இன்னொரு பக்கம் காவிரியின் வீட்டிற்கு சென்ற விஜயின் சித்தி, உங்கள் மகளை என் பையனுடன் சேர்த்து வைக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள்.

இதனால் கோபப்பட்ட காவிரியின் அம்மா, என் மகள் உங்கள் பையனிடம் பேசமாட்டாள். உங்கள் பையனும் என் மகளை பார்க்க வர வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாட்டி, சித்தி இருவருமே எதுவும் நடக்காதது போல் அமைதியாக இருந்தார்கள். அப்போது சந்தோஷத்தில் விஜய், காவிரியை நான் அழைத்து வருகிறேன். ஆர்த்தி எடுத்து வையுங்கள் என்றார். ஆனால், பாட்டி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். விஜய் சென்ற பிறகு தாத்தா, காவிரி வருவதில் உனக்கு சந்தோசம் இல்லையா? கேட்டார். அதற்கு பாட்டி, ஆமாம் அவள் விஜய்க்கு தேவை இல்லை என்று சொன்னார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் காவிரி வீட்டிற்கு வந்தவுடன் விஜய் சித்தி வீட்டிற்கு வந்த விஷயத்தை சொன்னார்கள். அதன் பின் வீட்டுக்கு வந்த விஜய், நான் காவிரியை என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன் என்று சொன்னார். உடனே காவிரி அம்மா, அதெல்லாம் நடக்காத விஷயம். தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்கள் என்றார். அதற்கு விஜய், காவிரி இல்லாமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன். நானும் காவிரியும் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா? காவிரியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கேட்டார். ஆனால், காவிரி காவிரியின் அம்மா முடியாது என்று அடம் பிடிக்கிறார்.

நேற்று எபிசோட்:
பின் காவிரியின் அம்மாவிற்கும் விஜய்க்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபப்பட்ட காவிரி, எனக்கு உங்களுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. நீங்கள் கிளம்பவில்லை என்றால் என் பிணத்தை தான் பார்ப்பீர்கள் என்று மோசமாக பேசி விட்டார். இதனால் உடைந்து போன விஜய் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் காவிரி வீட்டுக்கு வராததை பார்த்து விஜய்யின் பாட்டி, சித்தி இருவருமே உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் காவிரியிடம் நிவின், விஜயை திட்டி அனுப்பியதற்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார். காவிரியுமே உண்மையை சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், விஜயின் சித்தி வீட்டில் வந்து பேசியதால் தான் காவேரி மனம் மாறி இருக்கிறார். மற்றவர்களுக்காக உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்கிறார். பின் நிவின், குமரன் இருவருமே விஜயிடம் பேச போகிறார்கள். ஆனால், காவேரி தடுத்து நிறுத்தி, என்னால் விஜயின் வாழ்க்கையில் பிரச்சனை வேண்டாம் என்று அழுது கொண்டு சென்று விடுகிறார். அதற்குப்பின் காவிரியை பார்த்த பாட்டி, இவள் தான் மாசமாக இருப்பது போல் தெரிகிறது. நாளுக்கு நாள் இவள் வயிறு பெருசாகிறது என்று சொல்கிறார்,. ஆனால் காவேரி அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன் பாட்டியை திட்டி அனுப்பி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து காவிரியின் அம்மாவிற்கு சந்தேகம் வருகிறது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காவிரியை நினைத்து விஜய் ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது விஜயின் பாட்டி, காவிரியால் தான் எல்லா பிரச்சனையும் வந்தது. அவளை விட்டு நீ உன்னுடைய வாழ்க்கையை பார் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இதனால் விஜய் கோவப்படுகிறார். அப்போது விஜயின் சித்தி, பசுபதி நாளை ஜாமினில் வெளியே வருகிறார் என்ற விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜய், அவனை நான் சும்மா விடமாட்டேன் என்று கொந்தளிக்கிறார். இதனால் விஜய்யின் பாட்டி திட்டுகிறார். அதற்குப்பின் ஜாமினில் வெளியேவந்த பசுபதி நேராக காவிரியின் வீட்டிற்கு தான் வருகிறார். அங்கு காவிரியின் அம்மாவிடம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் பசுபத்தில். அதை பார்த்த காவிரி பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






