விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நீ கொஞ்சம் வசதியாக இருக்கிறாய். அந்த பொறாமையில் கூட அவர்கள் இப்படி சொல்லலாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். மறுநாள் காலையில் சாரதா, தன் மகள்களை வீட்டிற்கு வரவைத்தார். அப்போது கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி சாரதா பேசுகிறார். கங்கா, காவிரிக்கு கொடுக்கக் கூடாது. எனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடலாம் என்றார். அதற்கு காவேரி, அந்த வீட்டை நான் தான் வாங்குவேன் என்றார்.

சாரதா, இந்த வீட்டை நான் காவிரிக்கு தான் விற்கப் போகிறேன். எனக்கும் காவிரிக்கும் வீட்டை விற்கணும் என்று அவசியம் இல்லை. ஆனால், உங்களுக்கு பணத்தேவை என்பதால் தான் வீட்டை விற்க ஒத்துக் கொண்டேன். இந்த வீடு வேற யார் கையில் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. காவேரிக்கு தான் கொடுக்கப் போகிறேன் என்றார். இதை கேட்டு கங்கா- யமுனா இருவருமே கோபத்தில் குதித்தார்கள். காவிரியின் பெயரில் எழுதிக் கொடுக்க முடியாது என்று வழக்கம்போல தங்களுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்கள் கங்கா-யமுனா.
மகாநதி:
கடைசியில் சாரதா, இதுதான் என்னுடைய முடிவு. விருப்பம் இருந்தால் வீட்டை விற்கலாம் இல்லை என்றால் முடியாது என்றார். இதனால் கங்கா, யமுனாவில் எதுவுமே பேச முடியவில்லை. கடைசியில் காவிரிக்கு விற்க ஒத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் எல்லோருமே கொடைக்கானல் வீட்டிற்கு கிளம்பினார்கள். கங்கா தன்னுடன் குமரன் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். பின் ஒரு வழியாக எல்லோருமே கொடைக்கானல் சென்று விட்டார்கள். அங்கு சந்தானத்தை பற்றி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்கா, யமுனா இருவருமே வேண்டுமென்று காவிரியிடம் வம்பு இழுக்கிறார்கள். காவிரியும் பொறுமையாக இருக்கிறார். இருந்தாலுமே காவிரியை வெறுப்பேற்றும் மாதிரி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபப்பட்டு சாரதா, கங்காவை திட்டுகிறார். அடுத்த நாள் காலையில் எல்லோருமே தயாராகி ரெஜிஸ்டர் ஆபிஸ் கிளம்புகிறார்கள். அந்த சமயம் பார்த்து புதிதாக ஒரு குடும்பத்தினர் வீட்டிற்குள் வருகிறார்கள். சாரதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது வீட்டுக்குள் வந்த நபர், எல்லோருடைய பெயரையும் சொல்லி நலம் விசாரிக்கிறார். வீட்டில் எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. அப்போது அந்த நபர், நான்தான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி. எங்களுடைய குடும்பம் கத்தாரில் இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
அவர் கத்தாரில் வேலை செய்யும் போது தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். உங்களைப் பற்றி எல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார். ஆனால், எங்களை பற்றி உங்களிடம் சொல்லவில்லை. அதற்குள் அவர் தவறிவிட்டார் .என்றெல்லாம் சொல்கிறார் இதை கேட்டு சாரதா குடும்பத்திற்கு இடிமேல் இடி விழுகிறது. வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. சாரதா கோபப்பட்டு சண்டை போடுகிறார். காவிரி, போலீசை அழைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகிறார். அதற்கு அந்த நபரின் மகன், சந்தானம் தான் எங்கள் அப்பா என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று போட்டோவை எல்லாம் காண்பிக்கிறார். அதை
பார்த்து சாரதா குடும்பத்தில் எல்லோருமே உறைந்து போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






