விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி வீடு முழுக்க தன்னுடைய அம்மாவை தேடினார். அங்கு இல்லை என்றவுடன் தான் இருக்கும் தெரு, கோயில், கடை என்று எல்லா இடத்திலும் சாரதாவை தேடி அலைதார் காவிரி. எங்குமே சாரதா கிடைக்கவில்லை. பின் தன்னுடைய சகோதரிகளிடம் நடந்ததை சொல்லி காவிரி அழுதார். அதற்குப்பின் விஜய்க்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் காவிரி சொன்னார். உடனே விஜய் வீட்டிற்கு வந்து விட்டார். பின் விஜய், காவிரிக்கு சமாதானம் சொல்லி சாரதாவை தேடி அலைந்தார்கள்.

பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று பொது இடங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால், சாரதா எங்குமே இல்லை. இதனால் காவேரி ரொம்பவே உடைந்து விட்டார். ஒரு கட்டத்தில் காவிரி, சாரதாவை பார்த்து விட்டார். பின் தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா, நீதான் என்னை வீட்டை விட்டுப் போக சொன்னாய். நான் கொடைக்கானல் போகிறேன் என்றார். விஜய், சாரதாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
மகாநதி:
சாரதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அப்போது விஜய் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். காவேரி, விஜயை வீட்டிற்குள் அழைத்தார். அதற்கு பின் விஜய்- காவேரி இருவரும் சாரதாவிற்கு அட்வைஸ் சொல்லினார்கள். அந்த சமயம் பார்த்து விஜய்க்கு போன் செய்து தாத்தா, அம்முவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சொன்னார். உடனே பதறி அடித்துக் கொண்டு காவிரி, விஜய் இருவரும் இணைக்க போனார்கள். அங்கு காவிரி, அம்முவை ரொம்பவே கவனமாக பார்த்துக் கொண்டார். அது எல்லாம் பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, பள்ளியில் மதர்ஸ் டே விழா நடைபெற இருப்பதால் அம்முவை தயாராகி வர சொல்கிறார். அம்மு, என்னுடைய அம்மா இல்லாமல் நான் எப்படி விழாவில் கலந்து கொள்வது என்று சோகமாக சொல்கிறார். இருந்தாலும் காவேரி, அம்முவை சமாதானம் செய்து பள்ளிக்கு வர சொல்கிறார். பின் இதைப் பற்றி காவிரி, விஜய் இடமும் பேசுகிறார். விஜய், என் மகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நாங்கள் பள்ளிக்கு வரவில்லை என்று சொல்கிறார். காவிரி, அம்முவிற்கு எந்த தர்ம சங்கடம் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அம்முவை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே விஜய், உங்களுக்கு அம்முவை ரொம்ப பிடித்திருக்கிறது. என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னது தான் எனக்கு பிடிக்கவில்லை. நானே உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டார். இதனால் காவேரி மீண்டும் விஜய் மீது கோபப்பட்டு செல்கிறார். அதற்குப் பின் காவிரியின் வீட்டிற்கு வந்த விஜய், சாரதாவிற்கு போன் வாங்கி வந்து தருகிறார். அதெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் பள்ளியில் நடக்கும் மதர்ஸ் டே விழாவில் அம்மு அம்மாவாக நான் தான் கலந்து கொள்ளப் போகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு சாரதாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பின் இதைப்பற்றி சாரதா, கங்கா- யமுனாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்






