விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் செட்ரூமில் முத்துமலர், சிந்து இருப்பதை பார்த்த விஜய், இவர்களை எதற்கு இங்க தங்க வைத்தீர்கள்? கெஸ்ட் ரூமில் தங்க வையுங்கள். எல்லா ஏற்பாடும் செய்து கொடுங்கள். யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தார். அதற்குப்பின் காவிரி, கால் வலிக்கிறது என்று சொல்வதால் விஜய் கால் அமுக்கி விட்டார். பின் இருவருமே தங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

சாரதா, முத்தமலர் சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து பார்த்து தன்னுடைய மாமியாரிடம் புலம்பி வேதனை பட்டுக்கொண்டிருந்தார். கங்காவுமே, குமரன் நம்மிடம் உண்மையை சொல்லவில்லையே என்றும் வேதனைப்பட்டார். பின் குமரனும் வெளிநாட்டில் இருப்பதால் அதேபோல் தவறு செய்து விடுவாரோ என்ற பயத்திலேயே இரவு முழுவதும் தூங்காமல் புலம்பி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் கங்கா கவலையில் இருப்பதை அறிந்த விஜய் அவரிடம் பேசி இருந்தார்.
மகாநதி:
அப்போது கங்கா, குமரனும் அந்த தவறு செய்திருப்பாரோ என்று கவலையாக இருக்கிறது என்றார். அதற்கு விஜய், நீங்கள் என் மீது கூட சந்தேகப்படலாம். ஆனால், அவர் மீது சந்தேகப்பட தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகமா இருந்தால் அவரிடமே நேரடியாக போன் செய்து கேட்க வேண்டியதானே என்றார். விஜய் பேசியதற்கு பிறகு கங்கா கொஞ்சம் தெளிவாக இருந்தார் அதற்குப்பின் விஜய், காவிரி இருவரும் வாக்கிங் போனார்கள். அப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றியும் குழந்தையைப் பற்றியும் காவிரி பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்து, பசி தாங்க முடியாமல் ஒரு மரத்தில் நின்று கொய்யா பறித்துக் கொண்டிருக்கிறார். உடனே அந்த பக்கம் விஜய், காவிரியை பார்த்தவுடன் சிந்து ஒளிந்து கொள்கிறார். இதை கவனித்த விஜய், சிந்துவிற்கு கொய்யா பறித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். இன்னொரு பக்கம் முத்துமலர், தன்னுடைய பிள்ளைகள் பசியில் இருப்பதால் டீ போடுகிறார். உடனே அங்கு வந்த சாரதா, இந்த மாதிரி திருட்டுத்தனமாக சமைத்து சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கலாம் என்று அவமானப்படுத்துகிறார். வேதனையில் முத்து மலர், நான் மட்டும் இருந்தால் பிச்சை எடுத்து இருப்பேன். என்னை நம்பி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். என்ன செய்வது? என்று அழுது கொண்டு அங்கிருந்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது கங்கா தவறி விழப்போவதால் முத்துமலர் பிடித்து விட்டு கவனமாக இரு என்று சொல்லிவிட்டு செல்கிறார். பின் சாரதா, பசியோடு வந்தாள். நான் திட்டி அனுப்பிவிட்டேன் என்று வருத்தப்படுகிறார். சாரதா அவமானப்படுத்தியதை தன்னுடைய பிள்ளைகளிடம் சொல்லி முத்து மலர் ரொம்ப எமோஷனலாக அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவேரி,பாட்டி, சித்தி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது குழந்தை அசைவதால் எல்லோருமே காவிரியின் வயிற்றில் கை வைத்து சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






