விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன், கடையில் இருந்த மீதி வேலையை முடித்துவிட்டு அங்கு வேலை செய்தவர்களுக்கு பணத்தையும் கொடுத்து விட்டார். நான்கு நாட்களாக தூக்கம் இல்லாததால் அங்கேயே குமரன் படுத்து தூங்கி விட்டார். அந்த இடத்திற்கு கங்கா, காவேரி, விஜய் மூவருமே வருகிறார்கள் குமரன் தரையில் படுத்து தூங்குவதை பார்த்து கங்கா ரொம்பவே கஷ்டப்பட்டார். பின் குமரன் அருகில் உட்கார்ந்து கங்கா, தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது எழுந்த குமரன் கங்காவிடம் விசாரித்தார். அப்போது கங்கா, மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந். பின் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய்- காவேரி இருவரும் நடந்து சொன்னார்கள். அப்போது காவிரி, ன்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். பின் விஜய் ஐஸ்கிரீம் வாங்க கடைக்குள் சென்று விட்டார். அப்போது பசுபதி காரை விட்டு காவேரி மீது மோத போகிறார்.
மகாநதி
விஜய், காவிரியை காப்பாற்றி விட்டார். பின் விஜய், காவிரிக்கு தண்ணி கொடுத்து சமாதானம் செய்தார். அதற்குப்பின் இதெல்லாம் பசுபதி தான் செய்தார் என்று விஜய்க்கு தெரிந்தது. இருந்தாலும் அதை காவிரியிடம் சொல்லவில்லை. அதற்குப் பின் குமரன், வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்தார்.அப்போது குமரன், மலேசியாவில் துணி தைப்பதற்கான ஆர்டர் வந்திருக்கிறது. இரண்டு மூன்று மாதம் அங்கேயே தங்கி செய்ய வேண்டும். நான் மலேசியா போகப்போகிறேன். குழந்தை பிறக்கப் போகிறது பணம் வேண்டும. அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

சீரியல் ட்ராக்:
இதைக்கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். கங்கா, வேண்டாமென்று சொல்லியும் குமரன் கேட்கவில்லை. அதற்குப்பின் விஜய், நிவின் இருவருமே குமரனிடம் விசாரித்தார்கள். அப்போது குமரன், நல்ல வாய்ப்பை கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ளணும். நான் போயிட்டு வருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிவின்- விஜய் இருவருமே குமரனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார்கள். பின் பழைய நினைவுகளை எல்லாம் மூணு பேருமே நினைத்து பார்த்தார்கள்.
https://www.youtube.com/watch?v=bmFSnvc8eic&list=PLsSTkBgqx7ovoutybazbQIQOqworwxik6
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் காவிரி- கங்கா இருவருக்குமே ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகிறார்கள். அப்போது காவிரியின் ஸ்கேனில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதேபோல் கங்காவின் ஸ்கேனிலும் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்போது சாரதா, காவிரி குழந்தைக்கு எந்த பிரச்சனை இல்லை என்றால் நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டி இருக்கிறார். அதை கோவிலில் செய்தார். இதை பார்த்த கங்கா பயங்கரமாக கோபப்படுகிறார்.






