விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், நமக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை. நம்மீது நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாறக்கூடாது என்றார். சித்தப்பா கேட்டு தெரிந்து கொண்டு தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுத்தார். இதை காவிரி கேட்டு விட்டார். பின் இதைப்பற்றி காவேரி, விஜயிடம் சொன்னார். பின் விஜய், இவ்வளவு பிரச்சனை ஆனதற்கு காரணம் நீங்கள் தான் என்று எனக்கு தெரியும். இந்த பிரச்சனை எல்லாம் தெரிந்தும் நீங்கள் என்னிடம் சொல்ல வில்லை என்றார். சித்தப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே சந்தோஷமாக பிரச்சனையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

பாட்டி உடல்நிலை சரியில்லாமல் போன விஷயத்தை எல்லாம் தாத்தா, விஜய் இடம் சொன்னார். விஜய்-காவிரி இருவரும் சிந்துவை பார்ப்பதற்காக கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றார்கள். அப்போது விஜய், நீ செய்தது பெரிய விஷயம். ரொம்ப நன்றி என்று சிந்துவிடம் பணம் கொடுக்கிறார். முத்துமலர், சிந்து வேணாம் என்று சொன்னார்கள். இருந்தாலும் விஜய் கேட்காமல் கொடுத்தார். அப்போது சிந்து, நான் நர்சிங் முடித்து இருக்கிறேன். எனக்கு வேலை வாங்கித் தர முடியுமா? என்றார். விஜய் எதுவும் சொல்லாமல் சரி என்றார்.
மகாநதி:
அதற்குப் பின் முத்துமலர், கிருஷ்ணா எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார். பின் காவிரி, நர்மதாவை வரவைத்து நடந்ததை விசாரித்தார். அப்போது கிருஷ்ணா மீது தவறில்லை என்பதை விஜய் புரிந்து கொண்டார். மறுநாள் காலையில் வாக்கிங் செல்லும் போது கிருஷ்ணாவை சந்தித்து விஜய், காவிரி இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது விஜய், கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணாவும் எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், என்னுடைய கம்பெனியில் இன்ஜினியருக்கு ஆள் தேவைப்படுகிறது. சேர்ந்து கொள்கிறாயா என்று கேட்கிறார். கிருஷ்ணா, எதையும் யோசிக்காமல் நான் நன்றாக வேலை செய்வேன். எனக்கு சம்மதம் என்று சொல்லி விடுகிறார். பின் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது விஜய், அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொண்டால் உங்களிடம் பிரச்சனை செய்ய மாட்டார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று எல்லாம் சொல்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பாட்டிக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் டாக்டர் வந்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பாட்டியை செக் செய்த டாக்டர், அவர்கள் கூட இருந்து ஒரு நர்ஸ் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார். உடனே விஜய், நர்சை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் விஜய்-காவிரி இருவரும் சிந்துவை நர்சாக வைப்பதற்கு முடிவு செய்கிறார்கள். பின் முத்துமலர், சிந்துவை வரவைத்த விஜய், நீ நர்சாக இருந்து பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்பிடலில் எவ்வளவு வாங்கினாயோ அதையே தருகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் எமோஷனலான சிந்து, விஜய் காலில் விழுந்து நன்றி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






