விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா, நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு விஜய்யை பகடைக்காயாக வைத்திருந்தீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசினார். இதனால் கோபத்தில் நிவின் யமுனாவை அடிக்கப் போனார். இருந்தாலுமே யமுனா கேட்காமல் காவிரியை பற்றி தவறாகவே பேசிக் கொண்டிருந்தார். இதனால் நிவின் அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் சென்ற குமரன், வெண்ணிலா மாமாவின் உடைய அட்ரஸை எப்படியோ பேசி வாங்கி விட்டார். பின் அவரின் ஊருக்கு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் நிவின், ராகினியை சந்தித்து பேசினார்.

அப்போது நிவின், பசுபதி இருக்கும் இடத்தை பற்றி மெதுவாக பேசி வாங்க பார்த்தார். ஆனால், ராகினி
சொல்லவே இல்லை. சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வெண்ணிலா மாமாவின் ஊருக்கு சென்ற குமரன், அங்கு இருப்பவர்களிடம் எல்லாம் விசாரித்தார். பின் காவேரிக்கு போன் செய்த குமரன், வெண்ணிலா கண்டிஷன் எப்படி இருக்கு என்று பார் என்றார். இதனால் காவிரியுமே ஹாஸ்பிடலுக்கு போனார். ஆனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலமாக இருப்பதால் காவேரி மறைந்து கொண்டார்.
மகாநதி:
நர்சுக்கு போன் செய்த காவேரி, வெண்ணிலாவை பார்க்க கேட்டார். ஆனால், அவர் போலீஸ் இருப்பதால் முடியாது என்று மறுத்து விட்டார். காவேரியை பாலோ செய்த பசுபதி ஆட்கள் போன் செய்து பசுபதியிடம் சொன்னார்கள். அப்போது பசுபதி, காவிரியை போலீசிடம் மாட்டி விடுங்கள் என்றார். அந்த ஆட்களுமே போலீஸ் இடம் காவிரியை மாற்றி விட்டார்கள். அப்போது போலீஸ், காவேரிக்கு வர்னிங்க் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதற்குப்பின் போலீஸ் போன பிறகு காவேரி வெண்ணிலாவை சந்தித்து பேசுகிறார். வெண்ணிலாவும் கண் விழித்து விட்டார். அப்போது காவிரி, விஜய் ஜெயலில் இருந்தார். பசுபதி தான் உன்னை தள்ளிவிட்டார் என்று தெரியும்.

கடந்த வாரம் எபிசோட்:
தயவு செய்து உண்மையை சொல்லு. உனக்கும் விஜய்க்கும் நடுவில் நான் வரமாட்டேன். இது சத்தியம் என்று ரொம்பவே கதறி அழுதார். ஆனால், வெண்ணிலா எதுவுமே பேசவில்லை. அதற்கு பின் போலீஸ் வருவதால் காவேரி வந்து விட்டார். அதற்குப்பின் வெண்ணிலா காவிரியிடம் பேச வேண்டும் என்று நர்ஸிடம் சொன்னார். அதற்குப்பின் காவிரியும் வெண்ணிலாவை சந்திக்க வந்தார். அப்போது வெண்ணிலா, உண்மையாகவே நீ விஜய் வாழ்க்கையை விட்டு போய்விடுவாயா? என்று கேட்டார். அதற்கு காவேரி சம்மதித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலா, நீ எனக்கு கொடுத்த சத்தியத்தை எப்படி நம்புவது? இதற்கு முன்பே எனக்கு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஏமாற்றி விட்டாய். உன்னை நான் நம்ப மாட்டேன் என்று சொல்கிறார். உடனே காவேரி, எமோஷனலாக வெண்ணிலாவின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்து என் குழந்தையின் மீது சத்தியம். நான் விஜய்யை உனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன் என்று அழுகிறார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் நிவின், ராகினிக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது பசுபதியை பற்றி விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை போனை வைத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் நிவின் நேரடியாக ராகினி வீட்டிற்கு சென்று விடுகிறார். அப்போது நிவின் ரொம்ப எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின் பசுபதி பற்றியும் கேட்கிறார். ராகினி ஏதேதோ சொல்லி சமாளித்து நிவினை அனுப்பி விடுகிறார். பின் ராகினி தன்னுடைய அப்பாவை பார்க்க கிளம்புகிறார். பின்னாடியே நிவின் பாலோ செய்கிறார். இன்னொரு பக்கம் குமரன், வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு செல்கிறார். அங்கு வெண்ணிலாவின் அத்தை தான் இருக்கிறார். அவரை பின்தொடர்ந்து சென்று விசாரிக்கிறார். ஆனால், வெண்ணிலாவின் அத்தை உண்மை சொல்லாமல் ஏதேதோ காரணத்தை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






