விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலில் காவிரி-விஜய்யை பழிவாங்க அவருடைய தம்பி, ராகினி இருவரும் விஜயின் காதலி வெண்ணிலாவை தேடி அலைந்து இருந்தார்கள். பின் காவிரி-விஜய் இருவரும் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள். அப்போது வெண்ணிலா மீண்டும் வருகிறார். இதனால் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே ப்ரச்சனை வருகிறது. அதோடு இவர்கள் காண்ட்ராக்ட் திருமணம் தெரிந்தவுடன் காவிரியை, அவர் அம்மா வீட்டில் அழைத்து சென்று விட்டார்கள்.

மேலும், காவிரி-விஜய் இருவரும் காதலிக்கிறார்கள். வெண்ணிலாவுக்கு பழைய நினைவுகள் வந்து விஜயை காதலிக்கிறார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் நிவினுக்கு தெரிந்தது. ஆனால், காவிரி சொல்லக்கூடாது என்று சொல்கிறார். பின் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததில் இருந்து விஜய்யை பிடிக்க முடியவில்லை.
மகாநதி சீரியல்:
சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். பின் அவர் பார்த்து பார்த்து தன்னுடைய மனைவியை கவனித்துக் இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமானது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மனதை மாற்றி காவிரி, விஜயை பிரிக்க ஒரு கும்பலை சதி தீட்டுகிறது. பின் ஓரு நாள் முழுவதும் காவிரி-விஜய் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். காவிரிக்கு வீட்டிற்கு செல்ல மனமே இல்லை. இருந்துமே வேறு வழி இல்லாமல் தன்னுடைய மனைவியை அனுப்பி வைத்தார் விஜய். பின் விஜய், நிவீனை சந்தித்து பேசி இருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது விஜய், காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி நன்றி சொன்னார். உடனே நிவின், காவிரி தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்றார். நீங்கள் இப்படி இருப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். பின் விஜய், நிவினை கட்டி பிடித்து இருவருமே தங்களுடைய பழைய பிரச்சினைகளை மறந்து விட்டார்கள். பின் வீட்டில் விஜய், காவிரியுடன் இருந்த நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். பின் அவர் காவிரியை வர சொன்னார். காவிரியும் விஜய் பார்க்க வந்தார். அப்போது இருவருமே ரொம்ப எமோஷனாக தங்களுடைய குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரியின் அம்மா மற்றும் அத்தை இருவருமே, நீ விஜயை விவாகரத்து செய்துவிட்டு. உனக்கான வாழ்க்கையை பார் என்று சொல்கிறார்கள். அதற்கு காவிரி, நான் எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசுகிறேன் என்று அங்கிருந்து சண்டை போட்டு கிளம்பி வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டின் ஓனர் மாமி, என்னதான் நடக்குது? மீடியாக்கள் வீட்டின் முன்பு தொந்தரவு செய்கிறார்கள். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றெல்லாம் பேசுகிறார். உடனே விஜய், நானும் காவிரியும் சேர்ந்து வாழ்வதுதான் உண்மை. கூடிய விரைவில் நடக்கும் என்று பேசிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் காவிரி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது வழிமறைத்த வெண்ணிலா, என் புருஷனை மயக்கி திருமணம் செய்து விட்டாய். ஆனால், உங்களுடைய காண்ட்ராக்ட் திருமணமே முடிந்துவிட்டது. பணத்துக்காக இப்படி எல்லாம் செய்வாயா? மரியாதையாக விஜய்க்கு விவாகரத்து கொடுத்து விட்டு செல். நானும் விஜய்யும் கூடிய சீக்கிரமே கல்யாணம் செய்யப்போகிறோம் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். கூலாக காவிரி, விஜய் எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி. நீங்கள் எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் தான் கேட்கணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் எதற்கு என்னிடம் பேசுகிறீர்கள் என்று பதில் சொல்லிவிட்டு செல்கிறார்.






