விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், ராகவையும் அவருடைய அடியாட்களையும் அடி வெளுத்து வாங்கினார். ராகவ், விஜயிடம் இருந்து தப்பிக்கும் போது ஒரு லாரி மோதி விடுகிறது. இதனால் ராகவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். பின் அந்த இடத்திற்கு வந்த போலீஸ், விஜயிடம் நடந்ததை எல்லாம் விசாரித்தார்கள். அதற்குப்பின் ராகவ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள். இதைப் பற்றி விஜய், தன்னுடைய தாத்தாவிற்கு சொன்னார். பின் அம்முவை அழைத்துக் கொண்டு எல்லோருமே வீட்டிற்கு போனார்கள். மேலும், தாத்தா நேரமானாதால் காவிரியை அங்கேயே தங்க சொன்னார்.

அப்போது காவிரி உங்கள் மனைவி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?என்ன ஆனது? என்றெல்லாம் விசாரித்தார். விஜய், என்னுடைய மனைவி இறந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், அவர் உயிரோடுதான் இருக்கிறார். சூழ்நிலை காரணமாக தான் நாங்கள் பிரிந்திருக்கிறோம் என்றார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் தூக்கத்தில் அம்மு பயந்து போய் கத்தி அழுதார். காவிரி அவருக்கு ஆறுதலாக இருந்தார். அம்மு, நான் உங்களுடனே இருக்கிறேன். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றார். காவிரியும் சரி என்றார். இதை எல்லாம் பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார்.
மகாநதி:
இன்றைய எபிசோட்டில் தாத்தா, விஜய் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தாத்தா, தான் செய்த தவறை உணர்ந்து விஜய் இடம் மன்னிப்பு கேட்கிறார். விஜய், தன் தாத்தா பக்கம் இருக்கும் நியாய தரப்பை புரிந்து கொள்கிறார். அதற்குப்பின் ராகவ் இறந்து போனதால் இந்த கேசையே போலீஸ் முடிக்கும் விஷயத்தை விஜய் தெரிந்து கொள்கிறார், இன்னொரு பக்கம் ரூமில் காவேரி-அம்மு இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் காவிரி, விஜய், தாத்தா எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரி, எனக்கு உங்கள் எல்லோரையும் எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றுகிறது. அது ஏன் தான் தெரியவில்லை என்கிறார். தாத்தா, அது பூர்விக ஜென்ம பந்தமாக இருக்கும் என்று சமாளிக்கிறார். அதற்குப் பின் காவிரி, விஜய் இருவரும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது காவேரி, விஜயின் மனைவியைப் பற்றி கேட்கிறார். விஜய் தங்களுடைய திருமணத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
https://youtu.be/glWTkswBfno?si=hKeRoroZi4zqsU3j
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய்- காவிரி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது காவேரி, உங்களுடைய திருமணத்தைப் பற்றி சொல்லுங்கள். உங்கள் மனைவி யார்? போட்டோ காண்பியுங்கள் என்றெல்லாம் கேட்கிறார். விஜய், தன்னுடைய திருமண கதையை
ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு காவிரி, இதெல்லாம் நான் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது என்று சொல்கிறார். விஜய், சீக்கிரமாகவே உனக்கு எல்லாமே ஞாபகம் வரும் காவிரி என்று சொல்லி மனதிற்குள் சந்தோஷப்படுகிறார்.






