விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவேரி செக்கப்புகாக ஹாஸ்பிடல் போயிருந்தார். பின் விஜய்க்கு போன் செய்து ஹாஸ்பிடல் வந்திருக்கும் விஷயத்தை காவிரி சொன்னார். இதை கேட்டவுடன் விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார். காவிரி, நீங்கள் ஹாஸ்பிடல் வர வேண்டாம் என்றார். பின் காவிரி செக்கப்புக்கு உள்ளே போகும்போது விஜய் வந்து விட்டார். பின் இருவரும் ஸ்கேனிங் சென்டருக்கு போனார்கள். ஸ்கேனில் குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

குழந்தை நன்றாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னதில் காவிரி -விஜய் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்கு பின் காவிரி- விஜய் இருவரும் வெளியே வரும்போது போலீஸ் நின்று கொண்டிருக்கின்றது. இதை பார்த்து இருவரும் ஒளிந்து கொண்டார்கள். பின் விஜய், நான் எப்படியாவது போய் விடுகிறேன். நீ பத்திரமாக காரில் செல் என்று அனுப்பி வைத்தார். காவிரியை பார்த்து போலீஸ், விஜய் இங்குதான் இருக்க வேண்டும் என்று சோதனை செய்தார்கள். பின் வீட்டிற்கு போன காவிரியிடம் கங்காவின் ஸ்கேனிங் ரிபோட்டை காண்பித்தார்கள். அதை பார்த்து காவிரி ரொம்ப சந்தோசப்பட்டார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் காவிரி, விஜய் ரூமிற்கு சென்று சுத்தம் செய்தார். அங்கு விஜயினுடைய துணிகள் எல்லாமே கலைந்து கிடைக்கிறது. விஜயின் சட்டையை வைத்து ரொமான்டிக்காக காவிரி டான்ஸ் ஆடுகிறார். அதற்குப்பின் விஜயினுடைய டைரியை எடுத்து காவிரி படித்தார். அப்போது விஜய்க்கு போன் செய்த காவிரி , டைரி படிக்கும் விஷயத்தை சொன்னவுடன் அவர், வேண்டாம் என்றார். ஆனால், காவிரி ஒவ்வொன்றாக படித்து காண்பித்தார். ஆரம்பத்தில் விஜய், காவிரி பற்றி ரொம்ப பாசமாக எழுதி, அதற்குப்பின் முழுக்க முழுக்க தன்னுடைய மகளை பற்றி தான் எழுதியிருந்தார். இதையெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் வந்து விஜயிடம் செல்லமாக சண்டை போட்டார். இன்னொரு பக்கம் குமரன் ஹாஸ்பிடலில் துணிகளை கொடுக்க போனார்.

சீரியல் ட்ராக்:
அங்கு பசுபதி, வெண்ணிலாவின் மாமா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை ஒளிந்து நின்று குமரன் பார்த்தார். அப்போது வெண்ணிலாவின் மாமா, விஜயின் சொத்து கிடைக்கும். வெண்ணிலா சந்தோசமாக வாழ்வாள் என்று ஆசை காட்டி விஜய்க்கு எதிராக செய்ய சொன்னீர்கள். பின் சண்டையில் வெண்ணிலாவை நீங்களே மாடியில் இருந்து தள்ளிவிட்டு இப்போது அவளே தற்கொலை செய்து கொண்டால் என்று வீண் பழி போட்டு விட்டீர்கள். இதெல்லாம் நியாயமா? என்று கேட்டார். உடனே பசுபதி கோவப்பட்டு வழக்கம் போல வெண்ணிலா மாமாவை மிரட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்ட குமரன் ஷாக் ஆகி மொபைலில் ரெக்கார்ட் செய்தார். அதற்குப்பின் பசுபதி இடம் சண்டை போட்டு உண்மையை எல்லோரிடமும் சொல்லப் போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், காவிரிக்கு போன் செய்து ஹாஸ்பிடலில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். பசுபதி தான் வெண்ணிலாவைமாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார் என்று உண்மையும் சொல்லி, அதை போனில் ரெக்கார்ட் செய்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குமரனின் பைக் மீது பசுபதி மோதி விடுகிறார். இதனால் குமரன் கீழே விழுந்து விடுவதால் போனும் கீழே போய் விழுகிறது. உடனே பசுபதி, குமரனின் போனை உடைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் காவிரி, இந்த உண்மையை விஜய்க்கு போன் செய்து சொல்கிறார். விஜய்யும் அதிர்ச்சியாகிறார். அதற்குப்பின் குமரன், நிவின், காவிரி மூவருமே சந்தித்து பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது நிவின், நாங்கள் பசுபதியை பிடிக்கிறோம். நீ வீட்டில் கிளம்பு என்று காவிரியை அனுப்பி விடுகிறார்கள். ஹாஸ்பிடலில் பசுபதியும், வெண்ணிலாவின் மாமாவையும் பற்றி விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டதாக ஹாஸ்பிடல் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் நிவின்- குமரன் இருவரும் புலம்பி இருக்கிறார்கள். பின் இதை அறிந்த காவிரி, விஜய்யிடம் தகவலை சொல்கிறார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு விஜய் வருகிறார். ஆனால், பசுபதி வீட்டிலேயே இல்லை. அப்போது போன் செய்த காவிரி, தயவுசெய்து அங்கிருந்து கிளம்புங்கள். போலீஸ் பிடித்து விடப் போகிறார்கள் என்று பயப்படுகிறார். விஜய், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






