விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், நீ சீக்கிரம் என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று நம்புகிறேன் என்றார். காவிரியால் விஜயின் அன்பை விலக்கி வைக்க முடியவில்லை. அதற்குப்பின் காவேரி அம்மா, சொந்தக்காரர் ஒருவரின் விசேஷத்திற்கு கொடைக்கானல் சென்று இருந்தார். அப்போது கங்காவிற்கு ஃபோன் செய்த அவருடைய அம்மா, பசுபதி நம்முடைய வீட்டை அவனுடையது என்று சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறான் என்று புலம்பி அழுதார். உடனே குமரன், காவேரி, கங்கா, பாட்டி எல்லோருமே கொடைக்கானல் கிளம்பினார்கள்.

பசுபதி, தங்களுடைய வீட்டை அபகரிக்கிறான் என்ற விஷயம் தெரிந்து ராகினி, நிவினிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பசுபதி, சந்தானத்தின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அராஜகம் செய்து கொண்டிருந்தார். உன் புருஷன் 10 லட்சம் ரூபாய் கடன் தரணும். அதனால் இந்த வீடு என்னுடையது என்றார். காவிரி அம்மா, என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டிருந்தார். பின் காவேரி அங்கு வந்து விட்டார். அப்போது பசுபதி, சந்தானம் கையெழுத்து போட்ட டாக்குமெண்ட்டை கொடுத்தார். கோபத்தில் குமரன், காவேரி எல்லோருமே சேர்ந்து பசுபதியும் அவருடைய ஆட்களையும் அடிக்கிறார்கள். அந்த இடத்திற்கு போலீஸ் வந்தது.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் போலீஸ், டாக்குமெண்டில் உங்கள் கணவர் கையெழுத்து போட்டு பணம் வாங்கியது போல் தான் இருக்கிறது. நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்ளுங்கள். இங்கு இருந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள். ஒழுங்கு மரியாதையாக இரண்டு பேருமே கிளம்புங்கள் என்று சொன்னார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி அமைதியாகி விட்டார். பசுபதி அந்த வீட்டை எழுதி வாங்கியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார். இன்னொரு பக்கம் நிவினை சந்தித்து விஜய் பேசி இருந்தார். அப்போது விஜய், எதற்காக காவிரி இப்படி முடிவு எடுத்தால் என்று தெரியவில்லை.

நேற்று எபிசோட்:
என் பாட்டி சொன்னதால் இப்படி செய்கிறாளா? என்ன காரணம் என்று யோசிக்கவே முடியவில்லை. அவள் எதற்காக இப்படி செய்தால் என்று தெரிந்தால் நான் அதை சரி செய்ய செய்வேன். இன்னும் ஒரு நாள் தான் பார்ப்பேன். காவிரி வரவில்லை என்றால் நான் அவரை என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று சொன்னார். பின் நிவின், காவிரி இங்கு இல்லை. கொடைக்கானல் சென்று இருக்கிறார். பசுபதி அவர்களுடைய வீட்டை தரமாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இதைக்கேட்டு விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், நான் இப்பவே கொடைக்கானல் போகிறேன். அந்த பசுபதியை சும்மா விடமாட்டேன் என்று கொந்தளிக்கிறார். உடனே விஜயை தடுத்து நிறுத்தி விடுகிறார் நிவின். இன்னொரு பக்கம் பசுபதி ஒரு நாள் தங்குவதற்கு வீட்டில் அனுமதி தந்ததால் காவேரியின் அம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் அழுது கொண்டிருக்கிறார்கள். அதற்கு காவிரி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் நிவின் இல்லாத சமயம் பார்த்து யமுனா, விஜய் இடம் பேசுகிறார். அப்போது யமுனா, நீங்கள் எப்படியாவது காவிரியை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள். நிவின், காவிரியை இன்னும் மறக்கவில்லை. காவிரியும் நிவினை தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதனால் தான் அவள் உங்களுடன் வர மறுக்கிறார் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டு விஜய்க்கு சிரிப்புதான் வருகிறது. இருந்தாலுமே விடாமல் காவிரி, நிவினை சேர்த்து வைத்து யமுனா பேசுகிறார். கோபத்தில் விஜய், உனக்கு ஏன் இவ்வளவு அசிங்கமான புத்தி இருக்கிறது. நிவினை பற்றியும், என் பொண்டாட்டி பற்றியும் எனக்கு தெரியும். நீ தேவையில்லாமல் அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்து என்று திட்டி விட்டு செல்கிறார். மறுநாள் காலையில் பசுபதி, காவிரி குடும்பத்திடம் ரவுடிகளை வைத்து பிரச்சனை செய்கிறார். இதனால் கோபத்தில் காவிரி கத்தியை வைத்து எல்லோரையுமே மிரட்டி வீட்டை விட்டு அனுப்பினார். அந்த சமயம் வந்த போலீஸ், காவிரியை மிரட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






