விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பம் வந்த விஷயத்தைப் பற்றி சாரதா சொன்னவுடன் காவேரி பதறி கொண்டு கிளம்ப தயாராகினார். உடனே பாட்டி, தாத்தா எல்லோருமே தினமும் ஒரு பிரச்சனை வருவதா? என் பேரனுக்கு இது எல்லாம் தலையெழுத்தா? என்று காவிரி குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், அமைதியாக இருங்கள். நான் வந்து பேசுகிறேன் என்று காவிரியை அழைத்துக் கொண்டு வந்தார். பின் காவிரி, என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று எமோஷனலாக பேச, விஜய் ஆறுதல் சொன்னார்.

காவேரி, விஜய் இருவருமே சாரதா வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அப்போது முத்து மலர், எங்களுக்கு சேர வேண்டிய பங்கு கொடுத்துவிட்டால் நாங்கள் இருந்து கிளம்புவோம் என்றார்கள். ஒரு கட்டத்தில் கங்கா கோபப்பட்டு கத்தியதால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் விஜய், நீங்கள் இங்கே இருந்தால் பிரச்சினை தான் செய்வார்கள். எங்கள் வீட்டிற்கு கிளம்பலாம் என்று எல்லோரையும் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தார். பின் விஜய், சாரதா குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
மகாநதி:
இதை பார்த்து முத்து மலர் குடும்பத்தினர் பயங்கரமாக கோபப்பட்டார்கள். விஜய், தன்னுடைய வீட்டுக்கு வருவதற்குள்ளே முத்துமலர் குடும்பத்தினர் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்து தாத்தா, பாட்டி எல்லோருமே என்ன இது? ஏன் என்று கேட்டார்கள். பின் சாரதா, எதற்காக எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்றெல்லாம் கோபப்பட்டு சண்டை போட்டார். முத்துமலர் மகன், எங்களுக்கு பங்கு கொடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று பிரச்சனை செய்தார்.

இன்றைய எபிசோட் :
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சாரதா, எந்த பங்கும் கொடுக்க முடியாது. இங்கிருந்து கிளம்புங்கள் என்று திட்டுகிறார். உடனே விஜய் பாட்டி, எந்த பிரச்சனை என்றாலும் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டில் சத்தம் போடாதீர்கள் என்று காவேரி குடும்பத்தை மோசமாக பேசினார். இதனால் கங்காவிற்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். உடனே விஜய் அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி முத்து மலர் மகனை தனியாக அழைத்து சென்று பேசுகிறார். அப்போது முத்து மலர் மகன், எனக்கு வேறு வழி இல்லை. நான் செத்தப்பிறகாவது சொத்தில் பங்கு என் வீட்டிற்கு கொடுப்பீர்களா? எனக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை கேட்டு விஜய் மனம் மாறி, ஒருநாள் டைம் தருகிறேன். அதற்குள் எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பி விடனும். தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்.
பின் விஜய், தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் முத்து மலர் குடும்பம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதியும்வாங்கி கொள்கிறார். இதைப் பற்றி விஜய், காவிரியிடம் சொல்கிறார். சாரதா கோவப்பட்டு சண்டை போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






