விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா-யமுனா, கண்டிப்பாக வீட்டை விற்க தான் போகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். அந்த சமயப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் கூப்பிட்டதால் காவிரியால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விட்டார். அதற்குப்பின் காவிரி, தாத்தா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டை விற்பதை பற்றி காவிரி சொன்னார். அதற்கு விஜய் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது தாத்தா, நீ அந்த வீட்டை வாங்கிக்கொள் என்று சொன்னார். விஜய் நல்ல ஐடியா என்று யோசித்தார்.

தாத்தா, அந்த வீட்டை விற்க விற்பதாக இருந்தால் நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு விஜய், இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது. நாமே வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால், காவிரிக்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கங்கா, யமுனா என்ன சொல்வார்கள்? வீட்டை நானே வாங்கிக் கொண்டால் பிரச்சனை வருமா? என்றெல்லாம் யோசித்தார். அதற்கு விஜய் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாதானம் செய்தார். மறுநாள் ஆபீஸ்க்கு காவிரி, விஜய் இருவருமே கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் சாரதா, தீபாவளி பலகாரம் செய்து கொண்டிருந்தார்.
மகாநதி:
சாரதா வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து கொண்டு சந்தானத்தின் நினைவுகளை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு அழுதார்கள். அந்த சமயம் வந்த காவேரி, தீபாவளி பண்டிகைக்கு தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆனால், கங்கா எதுவுமே சொல்லவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே தீபாவளி பண்டிகை பற்றியும் தங்களுடைய குழந்தை பற்றியும் ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டு போனார்கள். இன்னொரு பக்கம் நர்மதா, காவிரி வீட்டிற்கு செல்வதை பற்றி கேட்டார். ஆனால் கங்கா, அங்கெல்லாம் தேவையில்லை. என்னால் வர முடியாது. நான் இங்கே தான் இருப்பேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்கா, எல்லார் வீட்டிலும் தான் தீபாவளி இருக்கிறது. நான் காவிரி வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று பிடிவாதம் ஆக இருக்கிறார். அந்த சமயம் நிவின்- யமுனா இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது யமுனா, காவிரி வீட்டிற்கு தீபாவளி கொண்டாட போகலாம் என்று சொல்கிறார். ஆனால், கங்கா முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எடுத்து சொல்லியுமே கங்கா கேட்கவில்லை. அதற்குப்பின் கங்காவை தனியாக அழைத்து சென்ற யமுனா ஏதோ பேசி சம்மதிக்க வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் எல்லோருமே காவிரி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பட்டாசு, வான வேடிக்கை கொண்டாட்டம் என்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அப்போது நர்மதா தவறுதலாக மத்தாப்பு கம்பியை கங்காவின் கை மேல் பட்டுவிடுகிறது. இதனால் கங்கா ஒரே அலப்பறை செய்கிறார். ஆனால், அவருக்கு கையில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் கங்கா வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இதை புரிந்து கொண்ட விஜய், ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொன்னவுடன் கங்கா ஒன்றும் இல்லை என்று சமாளித்து விடுகிறார். மறுநாள் காலையில் எல்லோருமே தீபாவளிக்காக தயாராகி வருகிறார்கள். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் கங்கா மட்டும் கோபமாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






