விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருந்தார்கள். காவிரிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அப்போது பாட்டி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து விஜய் இனிமேல் இங்கு இருக்க கூடாது. காவிரியுடன் இருந்தால் என் பேரனுக்கு இன்னும் ஆபத்துதான். அவனை வேறு ஒரு ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்றார்.

விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை.
மகாநதி:
காவேரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புகிறது. இதை அறிந்த பின் சாரதா குடும்பத்தின் எல்லோருமே காவிரியை பார்த்து பேசுகிறார்கள். காவிரி தன்னுடைய அம்மா, தங்கை எல்லோரும் விசாரித்துவிட்டு அப்பா எங்கே என்று கேட்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. உடனே டாக்டர் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று காவிரிக்கு தற்போது இருக்கும் ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது.

சீரியல் ட்ராக்:
அவருடைய பழைய ஞாபகம் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. விஜய், குழந்தை பற்றிய ஞாபகம் எதுவுமே காவிரிக்கு இல்லை. இதை அறிந்த விஜயின் சித்தி, கல்யானி இடம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாணி, விஜய்- காவிரியை பிரிக்க திட்டம் போட்டார்.
https://www.youtube.com/watch?v=N-GO2sR05ho
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கல்யாணி, காவிரியை உங்கள் ஊருக்கே அழைத்துக் கொண்டு போய் விடுங்கள். மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். எங்கள் பேத்தியை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். அதற்கு பின் விஜயை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். விஜய், காவேரி எங்கே? என்று கேட்கிறார். பாட்டி அழுது கொண்டே காவிரி இறந்து விட்டார் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் விஜய் உடைந்து போய் கதறி அழுகிறார். பின் விஜயின் சித்தி குழந்தையை காண்பித்து நீ ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னவுடன் விஜய் ரொம்ப எமோஷனல் ஆகிறார்.






