விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு காவிரியின் வீட்டிலேயே தூங்குகிறேன் என்று கேட்டதால் விஜயை ஒத்துக் கொண்டார். பின் காவிரி முதன்முதலாக தன்னுடைய மகளுடன் சேர்ந்து தூங்கினார். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மறுநாள் காலையில் கங்கா- யமுனா இருவரும் தங்களுடைய ஊருக்கு கிளம்பினார்கள். அப்போது வந்த விஜய், அம்முவை ஸ்கூலுக்கு ரெடி பண்ண அழைத்து சென்றார். சாரதா, நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். விஜய் சந்தோசப்படுகிறார்.

காவேரி பள்ளிக்கூடத்திற்கு தனியாக நடந்து சென்றார். விஜய், அவரை பின் தொடர்ந்து சென்றார். ஒரு கட்டத்தில் காவிரி கோபப்பட்டு விஜயை திட்டி அனுப்பி விட்டார். அதற்கு பின் பள்ளியில் காவிரியை சந்தித்து பிரின்ஸ்பல், நீங்கள் அம்மு விடம் மட்டும் அதிக அக்கறை செலுத்தாதீர்கள். மற்ற பேரன்ஸ்க்கு தெரிந்தால் பிரச்சினை ஆகும். எல்லோரையும் சமமாக நடத்துங்கள் என்றார். இதனால் காவேரி, அம்முவிடம் நெருக்கமாக பழகுவதை நிறுத்த நினைத்தார்.
மகாநதி:
அம்மு, சாப்பிட வந்தாலும், ஏதாவது கேட்டாலுமே காவிரி ஒரு ஆசிரியர் போலவே நடந்து கொண்டார். இதனால் அம்முவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அம்மு, காவிரிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அம்மு, நானும் உங்களுடன் வீட்டிற்கு வருகிறேன் என்றார். காவேரி, அதெல்லாம் தேவையில்லை. உன்னுடைய அப்பா வந்தவுடன் கிளம்பு. என் வீட்டிற்கு எல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் அம்மு ரொம்பவே வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராகவ் வெளியே வந்திருக்கும் விஷயத்தை அறிந்து விஜய் ஷாக் ஆகிறார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ராகவ் எதற்கு உங்க குழந்தையை கடத்தனும் என்று கேட்கிறார். விஜய் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் விஜய்,காவேரி, அன்பரசு மூவருமே ராகவ் வீட்டிற்கு செல்கிறார்கள். ஆனால், அங்கு ராகவில்லை. அன்பரசு, ராகவ் கார் நம்பர் தெரியும். அதை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார். பின் ராகவ், காரை டிரேஸ் செய்து கொண்டு விஜய் போகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ராகவ், குழந்தை காவிரியை தன்னுடைய காரில் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார். பின் ஒரு இடத்தில் ராகவ் காரை நிறுத்தி என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து விஜய்யின் கார் வந்து விடுகிறது. விஜய், ராகவை பிடித்து அடிக்கிறார். காவேரி, குழந்தை அம்முவை காப்பாற்றி ஆறுதல் சொல்கிறார்.






