விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் காவிரி, வெண்ணிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காவிரி, விஜய் உன்னை அவ்வளவு காதலித்தார். அவருக்காக தான் உன்னை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆனால், நீ அவர் மீது பழி போட்டு இருக்கிறாய் என்று கேட்டார். வெண்ணிலா, விஜய் உன் மீது பைத்தியமாக இருக்கிறாரே, விஜய் எனக்கு எப்படியாவது வேண்டும். அதற்காக தான் பசுபதி சொன்னது போல் நான் செய்கிறேன். விஜய் என்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டால் நான் உண்மையை சொல்லி விடுவேன் என்று என்றார். இதையெல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் ஃபோனில் ரெக்கார்ட் செய்தார்.

காவிரி, நான் உனக்கு விஜய்யை விட்டுத் தருகிறேன் என்றால் நீ எப்படி விஜய் மீது சுமத்தி இருக்கும் பழியை நீக்குவாய் என்று கேட்டார். அதற்கு வெண்ணிலா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களை விஜயின் சித்தப்பா கொலை செய்ய ஆள் அனுப்பியது உண்மைதான். ஆனால், நாங்கள் சென்ற வண்டி வேகமாக போனதால் தான் விபத்து ஏற்பட்டது. இதற்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை. பசுபதி சொன்னது எல்லாம் பொய் என்று சொன்னார். இதை எல்லாம் காவிரிக்கு தெரிந்த நபர் போனில் ரெக்கார்ட் செய்து விட்டார். அந்த சமயம் பார்த்து பசுபதி, ராகினி அங்கு வந்து விட்டார்.
மகாநதி சீரியல்:
காவிரியிடம் பேச விடாமல் வெண்ணிலாவை அழைத்து சென்றார்கள். பின் காவிரி, ஆதாரம் கிடைத்து விட்டதால் ரொம்ப சந்தோஷப்பட்டார். பசுபதி, காவிரி உன்னிடம் என்ன கேட்டாள்? என்று கேட்க, நடந்ததை எல்லாம் வெண்ணிலா சொன்னார். ஆனால், காவிரி போனில் ரெக்கார்ட் செய்த விஷயம் பசுபதிக்கு தெரியவில்லை. பின் வெண்ணிலா, ராகினியை வீட்டிற்கு அனுப்பி வைத்து பசுபதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அதற்கு பின் காவிரியும் வந்தார். போலீஸ், விஜய் மீது எஃப் ஐ ஆர் போட பார்த்தார்கள். அந்த சமயம் பார்த்து காவேரி உள்ளே போனார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் காவிரி, வெண்ணிலா உண்மையைச் சொன்னால் விஜய்யை விடுவீர்கள் தானே என்று சொன்னார் பசுபதி. அதற்கு வெண்ணிலா இங்கு வரணும் என்ற தோணியில் பார்த்தார். பின் காவிரி, வெண்ணிலா வரவில்லை என்றாலும் அவர் சொன்ன வாக்குமூலம் இருக்கிறது என்று வெண்ணிலா பேசியதை ரெக்கார்ட் செய்த வீடியோவை போலீஸிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் பசுபதி, விஜய் சித்தப்பா, வெண்ணிலா மாமா எல்லோருமே ஷாக் ஆனார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் வெண்ணிலாவின் மாமா தடுமாறி இருந்தார். உடனே விஜயின் சித்தப்பா- பசுபதி இருவருமே, இது பொய். வெண்ணிலாவை மிரட்டி வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து போலீஸ் ஸ்டேஷன் வந்த விஜய்யின் சித்தி, விஜய் மீது எந்த தவறும் இல்லை. இதெல்லாம் என் கணவர் செய்த வேலைதான். அவருக்கு துணை பசுபதி தான் என்று உண்மையை சொல்லி விட்டார். இதனால் போலீஸ் விஜய்யை விட்டு விட்டார்கள். விஜய் வெளியே பார்த்தவுடன் காவிரி அவரை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டார். பின் விஜய்- காவிரி இருவருமே பசுவதியிடம் சவால் விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து தாத்தாவிற்கு ஒரே சந்தோஷம். பின் காவிரி-விஜய் இருவருமே கைகோர்த்து கிளம்பும்போது ராகினி, வெண்ணிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். விஜய்- காவிரி சேர்ந்து இருப்பதை பார்த்து வெண்ணிலா கோபப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=TDWoa0PcjGg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய்- காவிரி இருவரும் சந்தோசமாக காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய், எனக்காக உன் அம்மா தனியாளாக நின்று ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு காவிரி, நல்ல அப்பாவிற்காக கஷ்டப்படுவது தப்பில்லை. இன்று முழுவதும் உங்களுடன் தான் இருக்க போகிறேன் என்று ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டு வருகிறார்கள்.






