விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, நீ எதையும் யோசிக்காதே. விஜயால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. கண்டிப்பாக வந்து விடுவார் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவிரி அனுப்பிய மெசேஜை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் காலையில் காவேரி, விஜய்க்கு போன் மேல் போன் செய்தார். கோபத்தில் விஜய் போன் எடுக்கவில்லை. அதற்கு பின் போன் எடுத்த விஜய், என்ன பிரச்சனை என்றார். அப்போது காவிரி, ஏன் மெசேஜை பார்த்து எனக்கு போன் செய்யவில்லை என்று கேட்டார். விஜய், எதற்காக பண்ணனும் என்று கேட்டார்.

காவிரி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு விஜய், நான் எவ்வளவோ உனக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் சென்று விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். இதனால் காவேரி ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே விஜய், காவிரியின் வீட்டிற்கு வந்து விட்டார். அதை பார்த்தவுடன் காவிரி ரொம்ப சந்தோசப்பட்டார். அப்பொழுது காவிரி அம்மா, பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை கொடுப்பது நியாயமா? நானே என் மகளை தப்பாக நினைத்து விட்டேன் என்று சொன்னார்.
மகாநதி:
அதற்கு விஜய், நாங்கள் இருவரும் மனதார கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்த பிறகு தான் காவிரியின் வயிற்றில் குழந்தை வந்தது. நாங்கள் இருவருமே நேசிக்கிறோம். என்னால் காவிரியை விட்டுக் கொடுக்க முடியாது என்றெல்லாம் பேசினார். இதைக் கேட்டு காவிரி அம்மா சந்தோஷப்பட்டார். இருந்தாலும் விஜயின் வீட்டில் பேசியதை வைத்து காவேரி அம்மா வருத்தப்பட்டார். விஜய், என்ன நடந்தது. உண்மையை சொல்லுங்கள் என்றார். உடனே காவிரியின் அம்மா, விஜயின் பாட்டி, சித்தி இருவருமே வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்ட என அனைத்து விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆனார்.

கடந்த வாரம் எபிசோட்:
தன்னுடைய பாட்டி, சித்தி செய்த வேலையை நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் விஜய், வீட்டில் சரி செய்துவிட்டு நான் காவிரியை அழைத்து செல்கிறேன் என்று அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் விஜயின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்து தாத்தா கோபப்பட்டு சண்டை போட்டார். அந்த சமயம் வந்த விஜய், தன்னுடைய சித்தப்பாவை பார்த்து அவரை அடித்து வெளியே அனுப்பினார்.

சீரியல் ட்ராக்:
உடனே பாட்டி, சித்தி இருவருமே விஜய்யை தடுத்து மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். அப்போது விஜய், எல்லோருமே என் முதுகில் குத்துகிறார்கள் என்றார். பின் காவிரி இடம் விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி விஜய் கேட்டார். கோபத்தில் பாட்டி, ஆமாம் நான்தான் அதை சொன்னேன். உன் வாழ்க்கை சீரழிவுதே என்னால் பார்க்க முடியாது என்றார். உடனே விஜய், நான் காவிரி விவாகரத்து கொடுத்தாலும் நான் கொடுப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள் என்று கோபப்பட்டு பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? இந்த சொத்து, நாங்கள் எதுவுமே முக்கியமில்லையா? அவளால் நீ எல்லாத்தையும் இழந்து நிற்கப் போகிறாய். அவள் இந்த வீட்டுக்கு வந்தால் நாங்கள் வெளியே போறோம் என்று சொல்கிறார். அதற்கு விஜய், காவிரி உடன் இருந்தால் இதைவிட பல மடங்கு சொத்தை நான் சேர்த்து விடுவேன். எனக்கு இந்த சொத்து, அந்தஸ்து, பணக்கார வாழ்க்கை எதுவுமே தேவையில்லை என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு பாட்டி, தாத்தா சாக் ஆகிறார்கள். அப்போது விஜய், நான் அப்பாவாக போகிறேன். இதை தான் உங்களிடம் சொல்வதாக இருந்தேன் என்கிறார். உடனே தாத்தா, நீ காவிரியை வீட்டுக்கு அழைத்து வா என்கிறார். அதற்கு விஜய், இப்போது காவிரி இங்கு வந்தால் மரியாதையாக இருக்காது. நான் காவிரியை மரியாதையாக நடத்த வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






