விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, தன்னுடைய மாமியாரை திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கங்கா, குமரன் அனுப்பிய பழைய மெசேஜை எல்லாம் எடுத்து கேட்டுக் கொண்டிருந்தார். பின் குமரனுக்கு போன் செய்து பேச முயற்சித்தார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. பின் தன் அம்மாவிடம் குமரனை பற்றி கேட்டு விசாரித்தார். அதற்கு சாரதா, நான் பேசி ரொம்ப நாளாச்சு. நீ எதற்காக மாசக்கணக்கில் பேசாமல் இருந்தாய். ஒழுங்கு மரியாதையாக மாப்பிள்ளை இடம் பேசி என்று அறிவுரை எல்லாம் செய்தார்.

கிருஷ்ணா, நர்மதா இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாடும் போது நர்மதா கீழே தடுமாறி விழும்போது கிருஷ்ணா பிடித்து விட்டார். ஆனால், இதை தவறாக புரிந்து கொண்ட விஜய், நர்மதாவை தொட்டுப் பேசாதே என்று திட்டி விட்டார். இது எல்லாம் கவனித்த சித்தப்பா, காவிரி அம்மாவிடம் ஒன்றுக்கு இரண்டாக கிருஷ்ணாவை பற்றி தப்பு தப்பாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த சாரதா, என் மகளிடம் தவறாக நடந்து கொள்வாயா? என்று உண்மை தெரியாமல் கிருஷ்ணாவை அடி வெளுத்து வாங்கினார்.
மகாநதி:
வீட்டில் பெரிய கலவரம் வெடிக்கிறது. பின் ஆபீஸிலிருந்து விஜய் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விசாரித்தார். சாரதா- முத்து மலர் இரண்டு குடும்பமே மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டார்கள். இதை பார்த்து விஜயின் தாத்தா, பாட்டி இருவரும் கோபப்பட்டார்கள். கடைசியில் விஜய், நீங்கள் இந்த வீட்டில் யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம். யாராக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று விடுங்கள் என்றார். இதை கேட்டு காவிரி சாக்காகினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சித்தப்பா செய்த சூழ்ச்சியால் வீட்டில் பெரிய கலவரம் நடந்திருப்பது விஜய்க்கு தெரிந்து விடுகிறது. பின் விஜய், கிருஷ்ணா தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை. தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம். இருந்தாலுமே முத்து மலர் குடும்பம் கெஸ்ட் ஹவுஸில் இருக்கட்டும். நீங்கள் இந்த பிரச்சினையை விடுங்கள் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ஆபீஸில் கன்ஸ்டிரக்ஷன் வேலை முழுவதுமாக முடியாததால் கஸ்டமர் எல்லோருமே பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை விஜய் இடம் சொல்ல வேண்டும் என்று ஆபீஸில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த சித்தப்பா, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். விஜயிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மீண்டும் சதி செய்ய திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் குமரனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விஜய்-நிவின் இருவருமே கவலைப்படுகிறார்கள். அதற்கு நிவின், நான் உடனே அங்கு சென்று என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து சொல்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். விஜய்யும் நிவின் சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்.






