விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய்யை கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை பார்ப்பதற்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண், விஜயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. ஒரு கட்டத்தில் விஜய் அந்த பெண்ணை திட்டி விட்டு சென்றார். பின் காவிரியிடம் அந்த பெண், இந்த ஆளு திமிரு பிடித்தவன். இவனுக்கு கல்யாணம் ஆகாது என்று திட்டினார். காவிரிக்கு ஒன்னும் புரியவில்லை.

காவிரி, எதற்காக உங்களுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று கேட்டார். விஜய், அந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சரியில்லை. என் குழந்தை என்னுடன் தூங்குமா? இல்லையா? என்று மோசமாக பேசுகிறார் என்றார். காவிரி எதுவும் சொல்லவில்லை. பின் விஜய்- காவிரி இடையே வாக்குவாதம் வருகிறது. ஒரு கட்டத்தில் விஜய், இதே மாதிரி நான் உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்தால் சும்மா இருப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு காவிரி, பாருங்கள். நானும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார்.
மகாநதி:
இதனால் விஜய்க்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் காவிரி மேட்ரிமோனியில் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் செய்து விட்டார். இதை எல்லாம் பார்த்து விஜய்க்கு கடுப்பாகிறது. பின் கோபத்தில் காவிரியை நடு ரோட்டிலேயே விட்டுவிட்டு விஜய் வந்தார். பின் இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதற்குப்பின் விஜய், காவிரி அழைத்து செல்ல வருகிறார். கோவத்தில் காவிரி முடியாது என்றார். பின் ஒரு வழியாக காவிரியை சமாதானம் செய்து விஜய் அழைத்து வந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், தன்னுடைய தாத்தாவிடம் காவிரி செய்த வேலை எல்லாம் சொல்லி புலம்புகிறார். அதற்குப்பின் யமுனா- கங்கா இருவரும் விஜய்க்கு போன் செய்து பேசுகிறார்கள். அப்போது விஜய், ரொம்ப வருத்தத்துடன் காவிரி தனக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்கிறார். இருவருமே விஜய்க்கு ஆறுதல் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் காவேரி தன்னுடைய அம்மாவிடம்
விஜய் நடந்து கொண்ட விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதோடு விஜயை மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் மேட்ரிமனியில் தனக்கு யாரும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விஜய்க்கு மட்டும் நிறைய பெண்கள் ஓகே சொல்லி இருக்கும் விஷயத்தை காவிரி, சாரதாவிடம் சொல்கிறார். பின் காவேரி, பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். விஜய், நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார். உடனே காவிரி, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். அவரிடம் பேசப்போகிறேன் என்று சொல்கிறா.ர் இதனால் விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வேதனைப்படுகிறார்.






