விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய்க்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்துக் கொண்டிருந்தார். எப்படியாவது விஜய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மும்முரமாக காவிரி இறங்கி இருந்தார். பின் ஒரு பெண்ணை பார்க்க விஜய்யை அழைத்துக் கொண்டு காவிரி சென்றார். அப்போது விஜய், எதற்காக இப்படி செய்கிறீர்கள்? எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஏதேதோ சொல்லி சமாளித்தார். காவிரி, பேசி பழகினால் எல்லாமே சரியாகிவிடும் என்றார். ஒரு கட்டத்தில் விஜய், எனக்கு உங்களைத்தான் பிடித்திருக்கிறது.

என் பொண்ணுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த காவிரி, ஒருவருடைய வாழ்க்கையில் நான் நுழையும்போது அந்த நபருடைய வாழ்க்கையில் நான் தான் முதல் பெண்ணாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மனைவியை அதிகமாக நேசித்திருக்கிறீர்கள். என்னுடன் நீங்கள் பழகினாலும் அவருடன் இருந்த நினைவுகள் தான் எனக்கு வரும். இதெல்லாம் செட்டாகாது என்று சொன்னார். இதனால் விஜய் ரொம்பவே கஷ்டப்பட்டார்.
மகாநதி:
அதற்குப்பின் காவிரி, விஜய்யை கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை பார்ப்பதற்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண், விஜயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. ஒரு கட்டத்தில் விஜய் அந்த பெண்ணை திட்டி விட்டு சென்றார். பின் காவிரியிடம் அந்த பெண், இந்த ஆளு திமிரு பிடித்தவன். இவனுக்கு கல்யாணம் ஆகாது என்று திட்டினார். காவிரிக்கு ஒன்னும் புரியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, எதற்காக உங்களுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று கேட்கிறார். விஜய், அந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சரியில்லை. என் குழந்தை என்னுடன் தூங்குமா? இல்லையா? என்று மோசமாக பேசுகிறார் என்கிறார். காவிரி எதுவும் சொல்லவில்லை. பின் விஜய்- காவிரி இடையே வாக்குவாதம் வருகிறது. ஒரு கட்டத்தில் விஜய், இதே மாதிரி நான் உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்தால் சும்மா இருப்பீர்களா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி, பாருங்கள். நானும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் விஜய்க்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் காவிரி மேட்ரிமோனியில் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் செய்து விடுகிறார். இதை எல்லாம் பார்த்து விஜய்க்கு கடுப்பாகிறது. பின் கோபத்தில் காவிரியை நடு ரோட்டிலேயே விட்டுவிட்டு விஜய் வருகிறார். பின் இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதற்குப்பின் விஜய், காவிரி அழைத்து செல்ல வருகிறார். கோவத்தில் காவிரி முடியாது என்று சொல்கிறார். பின் ஒரு வழியாக காவிரியை சமாதானம் செய்து விஜய் அழைத்து வருகிறார்.






