விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் மாமா, விஜயின் சொத்து கிடைக்கும். வெண்ணிலா சந்தோசமாக வாழ்வாள் என்று ஆசை காட்டி விஜய்க்கு எதிராக செய்ய சொன்னீர்கள். சண்டையில் வெண்ணிலாவை நீங்களே மாடியில் இருந்து தள்ளிவிட்டு இப்போது அவளே தற்கொலை செய்து கொண்டால் என்று வீண் பழி போட்டு விட்டீர்கள். இதெல்லாம் நியாயமா? என்று கேட்டார். உடனே பசுபதி கோவப்பட்டு வழக்கம் போல வெண்ணிலா மாமாவை மிரட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்ட குமரன் ஷாக் ஆகி மொபைலில் ரெக்கார்ட் செய்தார். அதற்குப்பின் பசுபதி இடம் சண்டை போட்டு உண்மையை எல்லோரிடமும் சொல்லப் போனார்.

குமரன், காவிரிக்கு போன் செய்து ஹாஸ்பிடலில் நடந்ததை எல்லாம் சொன்னார். பசுபதி தான் வெண்ணிலாவைமாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார் என்று உண்மையும் சொல்லி, அதை போனில் ரெக்கார்ட் செய்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குமரனின் பைக் மீது பசுபதி மோதி விட்டார். இதனால் குமரன் கீழே விழுந்து விடுவதால் போனும் கீழே போய் விழுந்தது. உடனே பசுபதி, குமரனின் போனை உடைத்து விட்டார். இன்னொரு பக்கம் காவிரி, இந்த உண்மையை விஜய்க்கு போன் செய்து சொன்னார். விஜய்யும் அதிர்ச்சியானார். அதற்குப்பின் குமரன், நிவின், காவிரி மூவருமே சந்தித்து பேசி இருந்தார்கள்.
மகாநதி சீரியல்:
அப்போது நிவின், நாங்கள் பசுபதியை பார்த்து கொள்கிறோம் என்று காவிரியை அனுப்பி விட்டார்கள். ஹாஸ்பிடலில் பசுபதியும், வெண்ணிலாவின் மாமாவையும் பற்றி விசாரித்தார்கள். ஆனால், அவர்கள் யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டதாக சொன்னார்கள். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் நிவின்- குமரன் இருவரும் புலம்பி இருந்தார்கள். பின் இதை அறிந்த காவிரி, விஜய்யிடம் தகவலை சொன்னார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு விஜய் வந்தார். ஆனால், பசுபதி வீட்டிலேயே இல்லை. அப்போது போன் செய்த காவிரி, தயவுசெய்து அங்கிருந்து கிளம்புங்கள். போலீஸ் பிடித்து விடப் போகிறார்கள் என்று பயப்பட்டார். விஜய், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஆறுதல் சொன்னார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே குமரனுக்கு அடிபட்டிருப்பதை பார்த்து பயந்து விட்டார்கள். குமரன், பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக பொய் சொல்லி இருந்தார். அதற்குப்பின் கடையிலிருந்து குமரனுக்கு போன் வர, அதைக் கேட்டவுடன் குமரன் பதறி கொண்டு தன்னுடைய துணிக்கடைக்கு போய் பார்த்தார். அங்கு அவருடைய கடையை அடித்து நொறுக்கி இருந்தார்கள். பின் இதை குமரன், நிவினிடம் சொல்ல, அவரும் வந்து விட்டார். அதிர்ச்சியில் நிவின், இது பசுபதி செய்த வேலைதான் என்று சொன்னார். குமரன் மனமுடைந்து அழுதார். அதற்குப்பின் குமரன் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால், உண்மையை மறைத்து விட்டார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காவிரி, நிவினுக்கு போன் செய்து என்ன நடந்தது? என்று விசாரித்தார். அப்போது நிவின், கடையை அடித்து நொறுக்கிய விஷயத்தை சொன்னவுடன் காவிரி வருத்தப்பட்டார். நிவின் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார். இதை பார்த்த யமுனா, வழக்கம் போல் நிவின், காவிரியை சந்தேகப்பட்டு சண்டை வாங்கி இருந்தார். பின் காவிரி இதையெல்லாம் விஜயிடம் சொன்னார். மறுநாள் காலையில் குமரன் கடைக்கு போனார். அங்கு நிவின்- குமரன் இருவருமே கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த விஜய் கடையை பார்த்து ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=WEtgYUfbSFs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் காவிரிக்கு உடல்நிலை ரொம்பவே முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே கங்காவை, காவிரியிடம் போக வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதனால் காவிரி, நான் தனியாகவே இருக்கிறேன் என்று விஜய் ரூமிற்கு சென்று விடுகிறார். பின்
போன் செய்த விஜய்யிடம் காவிரி உடம்பு சரியில்லாததை பற்றி சொல்கிறார். அதனால் விஜய், காவிரியை பார்க்க நேரிலேயே வந்து விடுகிறார். அப்போது விஜய், உடம்பு குணம் ஆகும் வரை நான் உன்னுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் காவிரியை பார்க்க அவருடைய அம்மா ரூமிற்கு வருகிறார். விஜய் ஒளிந்து கொள்கிறார். காவிரிக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் முழிக்கிறார்.






