விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, மேட்ரிமனியில் தனக்கு யாரும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விஜய்க்கு மட்டும் நிறைய பெண்கள் ஓகே சொல்லி இருக்கும் விஷயத்தை காவிரி, சாரதாவிடம் சொன்னார். பின் காவேரி, பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். விஜய், நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்றார். உடனே காவிரி, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்தார். அவரிடம் பேசப்போகிறேன் என்றார். இதனால் விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. இதைப் பற்றி விஜய், சாரதாவிடம் சொல்லி வேதனைப்பட்டார்.

காவிரி வேறொரு பையனை பார்க்க செல்லும் விஷயத்தை பற்றி விஜய், தாத்தாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு தாத்தா சோமு, ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் காவேரி சூப்பராக தயாராகி சென்றார். சாரதா, எங்கே என்று கேட்டார். காவிரி, ஒரு பையனை சந்திக்க செல்லும் விஷயத்தை சொன்னார். அதற்குப்பின் விஜய்யும், காவிரி சொன்னதால் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக காபி ஷாப் போனார்.
மகாநதி:
அங்கு விஜய் அந்த பெண்ணுடன் பேசாமல் காவேரி எங்கு சென்று இருப்பார்? யாரை பார்த்து பேசி இருப்பார்? என்று நினைத்துக் கொண்டிருந்தார். அந்த பெண் சொல்வதை காது கொடுத்து கூட விஜய் கேட்கவில்லை. பின் தொடர்ந்து விஜய், காவிரிக்கு போன் செய்தார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் போனை எடுத்து திட்டி வைத்து விட்டார். காவிரி ரொம்ப ஜாலியாக தன்னை பார்க்க வந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். பின் விஜய் கோயில், காபி ஷாப் என்று காவிரியை தேடி சென்றார். ஒரு கட்டத்தில் காவிரி ஒரு கடையில் டீ குடித்து இருப்பதை பார்த்து விட்டார் விஜய்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரியை சந்தித்த விஜய், எல்லாம் பேசி முடிந்து முடித்து விட்டீர்களா? என்று கேட்கிறார். காவிரி, கார்த்தியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவருக்கும் என்னை பிடிக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரத்தில் எங்கள் இருவருக்கும் செட்டாகிவிடும் என்று சொல்கிறார். இதை கேட்டு விஜய்க்கு பயங்கர கடுப்பாகிறது. பின் காவிரி, விஜயை பார்க்க வந்த பெண்ணை பற்றி விசாரிக்கிறார்.
விஜய், அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் காவிரி அந்த பெண்ணிடம் விஜய் பற்றி பேச போகிறார்.

சீரியல் ட்ராக்:
விஜயுமே கார்த்தியிடம் பேசுகிறார். அப்போது விஜய், காவேரி என்னுடைய முறை மாமன் மகள். ஆனால், அவள் ரொம்ப திமிர் பிடித்தவள். அவளை போய் எப்படி ஓகே சொன்னீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார். அது மட்டும் இல்லாமல் சாரதாவிற்கு போன் செய்து காவிரியைப் பற்றி பேச சொல்கிறார் விஜய். சாரதா, காவிரியை பற்றி மோசமாக சொல்கிறார். இதனால் கார்த்திக்கு பயமாக இருக்கிறது. காவிரியை திருமணம் செய்ய வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார். விஜய் வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து செல்கிறார்.






