விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, சாரதா இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பதை கவனித்த விஜயின் தாத்தா, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் வேலையெல்லாம் முடித்துவிட்டு விஜய்-காவிரி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சோர்வாக இருப்பதால் காவிரி, டீ கேட்டார். பின் விஜய்யும் காவிரி சாப்பிடுவதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து ஆபீஸில் நடந்ததை பற்றி எல்லாம் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அடுத்த நாள் காலையில் தாத்தா, பாட்டி இருவரும் விஜய்யை பேசுவதற்கு கூப்பிட்டார்.

விஜய், என்னவோ நடக்கப்போகிறது என்று பயந்து கொண்டிருந்தார். உடனே பாட்டி, காவிரியின் வளைகாப்பு பற்றி பேசணும். வீட்டில் உள்ள எல்லோருமே வரட்டும் என்றார். பின் காவிரி, சாரதா, கங்கா எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது தாத்தா, காவேரிக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்த இருக்கிறோம். வளைகாப்பு முடிந்தும் காவிரி இங்கே இருக்கட்டும் என்றார். சாரதா, வளைகாப்பு முடிந்து என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார். அதற்கு பாட்டி ஒத்துக் கொள்ளவே இல்லை. தாத்தா, உங்கள் பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு காவிரி உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றார். இதனால் சாரதாவால் எதுவும் பேச முடியவில்லை.
மகாநதி:
விஜய்- காவிரி இருவருமே ஆபீஸிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இந்த நேரத்தில் வளைகாப்பு தேவையா? என்றார். விஜய், கண்டிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவித்து தான் ஆகணும். எனக்காக வளைகாப்பு நீ செய்து கொள் என்றெல்லாம் சொல்வதால் காவிரியும் ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் பாட்டி கல்யாணி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு போனார்கள். உடனே சிந்து, பாட்டியை செக் செய்தார். கல்யாணிக்கு சுகர் குறைந்திருக்கிறது என்று பாலில் சர்க்கரை அதிகமாக போட்டு சிந்து குடிக்க வைத்தார்.

சீரியல் ட்ராக்:
சித்தி சிந்துவை குடிக்க விடாமல் தடுத்தார். இருந்தாலும் கேட்கவில்லை சிந்து குடிக்க வைத்து விட்டார். உடனே பாட்டியும் கண் விழித்து விட்டார். அதற்குப்பின் சிந்து, பாட்டியின் சுகர் லெவல் செக் செய்தார். மாத்திரை போட்டு 20 நிமிடம் கழித்து சாப்பிடனும் என்று சிந்து சொன்னார். பின் வீட்டிற்கு வந்த டாக்டர், சிந்து சொன்னதை தான் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஷாக் ஆக இருந்தது. டாக்டர், வீட்டிலேயே ஒரு டாக்டரை வைத்துக்கொண்டு எதற்காக என்னை கூப்பிட்டீர்கள். அவர்களே எல்லாம் பார்த்து விட்டார்கள்.தாமதம் செய்து இருந்தால் தான் பாட்டிக்கு இவர்களுக்கு ஏதாவது ஆகிருக்கும் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், நமக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை. நம்மீது நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாறக்கூடாது. அதற்கான வேலைகள் எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் இதைப்பற்றி ஐயப்பனிடம் சித்தப்பா கேட்டு தெரிந்து கொண்டு தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுக்கிறார். இதை காவிரி கேட்டு விடுகிறார். பின் இதைப்பற்றி காவேரி, விஜயிடம் சொல்கிறார். பின் விஜய், இவ்வளவு பிரச்சனை ஆனதற்கு காரணம் நீங்கள் தான் என்று எனக்கு தெரியும். இந்த பிரச்சனை எல்லாம் தெரிந்தும் நீங்கள் என்னிடம் சொல்ல வில்லை என்கிறார். சித்தப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே சந்தோஷமாக பிரச்சனையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.






