விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா மீண்டும் மீண்டும் காவிரியின் திருமணத்தை பற்றிய பேசி கொண்டிருந்தார். காவேரி, என்ன சொன்னாலும் நான் விஜய்யை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீங்கள் வேறொரு மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்லி விட்டார். இதனால் கங்கா- யமுனா இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் கங்காவின் மகள் நோட்டு கேட்டதால் காவிரி அட்ட போட்டியில் இருந்து சில நோட்டுகளை எடுக்கப் போனார். ஆனால், அங்கு விஜயின் அப்பள விளம்பரத்திற்கான நோட்டீஸ் இருக்கிறது.

அதை பார்த்தவுடன் காவேரி ஷாக் ஆனார். பின் இதை பற்றி கங்கா, யமுனாவிடம் காவிரி கேட்டார். அவர்களும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். இருந்தாலும் காவிரிக்கு அதில் நம்பிக்கை இல்லை. பின் இதைப்பற்றி விஜய் இடம் கேட்பதற்காக அவருடைய வீட்டிற்கு கிளம்பினார் காவிரி. விஜயின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, விஜயின் அப்பளம் விளம்பர நோட்டீசை காண்பித்தார். அதை பார்த்தவுடன் விஜய் தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்த்து சந்தோசப்பட்டார்.
மகாநதி:
விஜய், அந்த அப்பளம் விளம்பரம் எப்பவோ செய்தது என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் விஜய் வேலை இருப்பதால் வெளியே சென்று விட்டார். காவிரி, அம்முவுடன் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்த விஜயின் சித்தி சந்தோஷப்பட்டார். பின் காவிரியிடம் விஜயின் சித்தி, நீ அம்முவைய நன்றாக பார்த்துக் கொள்கிறாய். உன்னுடைய மகள் போலவே நினைக்கிறாய். விஜயை திருமணம் செய்து கொள் என்றார். காவிரி அதெல்லாம் முடியாது என்றார். உடனே விஜய்யின் சித்தி, ரொம்ப கோபமாகவும் கண்டிப்பாகவும் பேசுவதால் காவிரி பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்டு காவிரி அங்கிருந்து சென்று விட்டார். இதையெல்லாம் கவனித்த அம்மு, தன் தந்தை விஜய் வந்தவுடன் சொன்னார். விஜய், எதற்காக இப்படி செய்தீர்கள்? நானே பேசிக்கொள்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்றார். இன்னொரு பக்கம் நிவின், காவிரியிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டார். காவிரி, வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தான் ஏற்கனவே பார்த்த நபரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காவிரி சொல்கிறார். இதை கேட்டு மொத்த வீடுமே சாக் ஆகிறது. அதற்குப்பின் காவிரி, தான் திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திகை சந்தித்து பேசுகிறார். இருவருமே தங்கள் திருமணத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதைப்பற்றி நிவின், விஜயை சந்தித்து பேசுகிறார்.
விஜய், பார்த்துக் கொள்ளலாம். காவிரி எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டாள் என்று சொல்கிறார். அதற்கு பின் அம்முவிடம் விஜயின் சித்தி, காவிரி வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போவதை பற்றி சொல்கிறார். இதனால் அம்மு ரொம்பவே சோகமாக இருக்கிறார். பின் காவிரி எடுத்த முடிவால் சாரதா கோபப்படுகிறார்.






