20 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் இணையும் ‘தீனா’ பட நடிகர். அஜித்துக்கு ‘தல’னு பெயர் வர காரணமே இவர் தான்.

0
611
- Advertisement -

20 ஆண்டுகளுக்கு பிறகு ஏகே 61 படத்தில் அஜித்துடன் மகாநதி சங்கர் இணைந்து நடிக்க உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து இருந்தார். இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நோக்கி சென்று இருந்ததாக இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏகே 61 படம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:

அதுமட்டும் இல்லாமல் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் அந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதால் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

-விளம்பரம்-

தீனா படம் குறித்த தகவல்:

முதலில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பதாக கூறி இருந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மகாநதி சங்கர் மீண்டும் அஜித்துடன் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட்டான படம் தீனா. இந்த படம் முதலில் நடிகர் விஜய்க்கு தான் வந்தது. ஆனால், அப்போது பிரியமணவளே , பத்ரி போன்ற படங்களில் விஜய் நடித்து வந்ததால் தீனா பட வாய்ப்பை தவரவிட்டார்.

அஜித்- மகாநதி சங்கர்:

பின் தீனா படத்தில் நடிகர் அஜித் ஹீரோ ஆனார். மேலும், முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான். அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார். ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடித்திருந்தால் தற்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி என்று அழைப்பதற்கு பதிலாக தல என்று தான் அழைத்திருப்பார்கள். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் மகாநதி சங்கர் நடிக்க உள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

Advertisement