மகாராஜா படத்தில் முதலில் நடிக்க இருந்த விஜய் ஆண்டனி – இப்படி ஒரு சிக்கலால் பறிபோன வாய்ப்பு

0
290
- Advertisement -

மகாராஜா படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தான் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதி, தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை, திருடி விட்டார்கள் என்று போலீசில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று அர்த்தம். பின் போலீஸ் எந்த செல்வத்தை காணவில்லை என்று கேட்கிறார்கள்.

- Advertisement -

மகாராஜா படம்:

விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை குறித்து சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த போலீஸுக்குமே கோபம் வருகிறது. அதன் பின் விஜய் சேதுபதியை அடித்து விரட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னுடைய லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தருகிறேன் என்று விஜய் சேதுபதி போலீஸ் இடம் சொல்கிறார். ஐந்து ரூபாய்க்கு கூட தேராத ஒரு பொருளை இவ்வளவு விலை கொடுத்து இவன் தேட காரணம் என்ற என்று எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது.

படத்தின் கதை:

பின் எல்லோருமே அந்த பொருளை தேட ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில் திருடு போன லட்சுமி என்ன? அந்த பொருளுக்கு விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெறுவது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை வாரி குவித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

முதலில் நடிக்க இருந்த நடிகர்:

இந்நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்சயன், இந்த கதையை முதலில் நான் தயாரிக்க இருந்தது. அப்போது விஜய் ஆண்டனி தான் நடிக்க இருந்தது. கதையை கேட்டவுடன் விஜய் ஆண்டனியும் நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என்று சொன்னார். ஆனால், இயக்குனர் நித்திலன் ஏற்கனவே ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் இடம் முன் பணம் வாங்கி விட்டார்.

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

அவர்களும் தடையில்லா சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். அதனால் தான் என்னால் இந்த படத்தை தயாரிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ’ படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement