விளக்கமாறு, துடப்பத்தால் போட்டியாளரை அடிக்க சென்ற யாஷிகா.! யார், எதற்கு தெரியுமா.?

0
630
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் மேலாகினாலும் இந்த வார நிகழ்ச்சி தான் மிகவும் பரப்பாக சென்றது என்று கூறலாம். இந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ‘சர்வாதிகார ராணி’ பொறுப்பு கொடுக்கப்படத்திலிருந்த்து நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் பார்ப்பவர்களை எரிச்சலின் எல்லைக்கே சென்றது.
அதிலும் இந்த வாரம் ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் என்னவென்று நாம் அனைவரும் அறிந்த தான். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 2)ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மஹத்திற்கு சிக்ரெட் டாஸ்க் ஒன்றைகொடுத்திருந்தார் . அதில் மற்ற போட்டியாளர்களை நீங்கள் காரணமில்லாமல் வெறுப்பேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Yashika-Anand-in-Bigg-Boss-House

- Advertisement -

இதனால் கொஞ்சம் கிருக்குத்தனமாக செயல்பட்ட மஹத், சமயலறையில் டீ போட்டு கொண்டிருந்த யாஷிகா மற்றும் ரித்விகாவை வம்புக்கிழுத்து அவர்கள் போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றினார். மஹத் இதனை டாஸ்க்கிற்காக செய்கிறார் என்று உணராத ரித்விகா மற்றும் யாஷிகா இருவரும் மஹத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மஹத் பல முறை யாஷிகா போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றியதால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த யாஷிகா மஹத்தை விளக்குமாறு கொண்டு அடிக்க முற்பட்டார். ஆனால், அவரை ரித்விகா தடுத்து விட்டார்.இருப்பினும் மஹத்தை விளக்குமாறுடன் துரத்தி கொண்டே இருந்தார் யாஷிகா. இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகினர். இதே போல சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா டாஸ்க்கிற்காக சென்றாயன் குடித்துக் கொண்டிருந்த டீயை குப்பையில் ஊற்றியபோது ஐஸ்வர்யாவிற்கும், சென்றாயனிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனால், அப்போது யாஷிகா வாயே திறக்க வில்லை.

-விளம்பரம்-

Bigg-Boss-mahat

ஆனால், தான் போட்டுக்கொண்டிருந்த டீயை கீழே ஊற்றியதும் மஹத்தை விளக்குமாறு கொண்டு விரட்டிய யாஷிகாவின் இந்த செயல் ரசிகர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தியது.அதே போல இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் வரம்பு மீறிய சில செயல்களை செய்து வருகின்றனர். அதுவும் இவர்கள் இருவரும் வடா மாநிலத்தில் இருந்து வந்ததால் இவர்கள் மற்ற தமிழ் பெண்களை விட பல வரம்பு மீறிய செயல்களை செய்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் வலைத்தளங்களில் வட மாநிலத்தில் இருந்து இவர்கள் தமிழ் போட்டியாளர்களை கேவலப்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

Advertisement