மஹத், யாஷிக காதல்.! காதலை முறித்த பிராச்சி.! பிராச்சியிடம் பேசிய ஷாரிக்..!

0
1066
Pirachi
- Advertisement -

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பது உண்மை தான் என்று கூறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காதலிக்கும் போது எப்படி வேறு ஒரு பெண் மீது காதல் வரும் என்று சமூக வலைத்தளத்தில் மஹத்தை வறுத்தெடுத்து வந்தனர். இதையடுத்து மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஹத் மற்றும் யாஷிகாவிற்கு இடையேயான காதல் குறித்து ஷாரிக் விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-

Mahat-Raghavendra

- Advertisement -

சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஷாரிக்கிடம், மஹத் மற்றும் யாஷிகா காதல் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது அதுகுறித்து பேசியுள்ள ஷாரிக் ‘அவர்(மஹத்) என்னிடம் யாஷிகா பற்றி கூறும் போது அவர் மீது ஈர்ப்பு (infatuation) இருந்தது என்று மட்டும் தான் கூறியிருந்தார். வெளி உலகில் எந்த தொடர்பும் இல்லாமல் தான் அங்கே அனைவரும் இருந்தோம். அப்படி இருக்கும் போது ஒரு அழகான பையனும், பொன்னும் இருக்கும் போது கண்டிப்பாக ஒரு அட்ராக்ஷன் வரும் தான். அவங்க இருவருக்கும் ஒரு எமோஷன் தான் வந்தது. அது லவ் கிடையாது.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ‘பிராச்சிக்கும், மஹத்திற்கும் இருக்கும் பிரச்சனை கண்டிப்பாக மஹத் வெளியில் வந்தால் சரியாகிவிடும். நான் இதுகுறித்து பிராச்சியிடம் பேசும் போது பிராச்சி எதோ ஒரு அவசரத்தில் தான் இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பது எனக்கு தெரிந்தது. பிராச்சிக்கு, மஹத்தை மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக மஹத், வெளியில் வந்தால் பிராச்சியை சமாதானம் செய்து விடுவார். மஹத்தை, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள். மஹத் ரொம்பவும் பாவம்.’ என்று ஷாரிக் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Bigg Boss Sharik

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஷாரிக், மஹத்திடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது ஷாரிக், மஹத் காதலி பிராச்சி குறித்து தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கும்போது மஹத் வெளியாவந்தவுடன் பிராச்சியிடம் இணைந்து விடுவார் என்பது போலவே தோன்றுகிறது. அதற்கு மற்றுமொரு சான்றாக மஹத்துடனான காதலை முறித்துவிட்டதாக பதிவிட்டிருந்த பதிவை சில மணி நேரத்திலேயே நீக்கி இருந்தார் பிராச்சி.

Advertisement