வித்யாசமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்ட மஹத்.!

0
654
mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் மஹத் வெளியேற்றபட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அதில் இந்த வார எலிமினேஷனில் அவருடைய பெயர் வித்யசமான முறையில் கமல் அறிவித்திருந்தார் என்றும் கடந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

Bigg-Boss-mahat

- Advertisement -

அது என்னவெனில் பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபரின் பெயரை அறிவிக்கும் போது கமல் அவர்கள் கையில் ஒரு உதா நிற கவரை வைத்துக் கொண்டிருப்பார். அதனுள்ளே ஒரு வெள்ளை நிற அட்டையில் ‘எலிமினேட் ‘ செய்யப்பட்ட நபரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.

ஆனால், இம்முறை இந்த வாரம் ‘எலிமினேட்’ செய்யப்பட்டுள்ள மஹத்தின் பெயர் மாறாக ஒரு சிவப்பு நிற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. இது பிக் பாஸ் வரலாற்றிலேயே நடைபெற்றுள்ள புது விதமான ‘எலிமினேட்’ அறிவிப்பாக கருதப்படுகிறது.

-விளம்பரம்-

mahat

பொதுவாக கால் பந்து போட்டிகளில் அதிமான விதிமீறல்களை செய்யும் போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவதை நாம் கண்டிருப்போம்.யாஷிகாவிடம் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வைத்தது, அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரமாக மஹத் நடவடிக்கை மோசமாகஇருக்கிறது, அதுமட்டும் இன்றி மும்தாஜிடம் மிகவும் எல்லை மீறி நடந்து கொண்டு வந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் விதியே உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட கூடாது என்பது தான்.

ஆனால், டாஸ்கில் மும்தாஜ், ரித்விகா மற்றும் டேனியலிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்ட மஹத், டேனியளை பல முறை தாக்கி இருந்தார். இதில் ஒருமுறை டேனி, மஹத் தன்னை கடித்து விட்டார் என்று பிக் பாஸிடம் முறையிட்டும் இருந்தார்.

mumtaj

இந்த அணைத்து விடயங்களும் மஹத் மீது போட்டியாளர்களுக்கு, ரசிகர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. மஹத் செய்த அத்துமீறல்களால் தான் இந்த வாரம் ‘எலிமினேட் ‘ அறிவிப்பில் அவருடைய பெயர் சிகப்பு ஆட்டையில் அச்சிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Advertisement